பக்கம்:நூறாசிரியம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

நூறாசிரியம்

அனைவர்க்கும் உரியவன் ஆகிப் பெருமைபெற்ற, உள்ளத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் பெருமைக்குரிய வரலாற்றை நினைந்து, இளமை கிளர்ந்தெழும் உணர்வினால் சிறந்தோனுடைய தாயாகிய நீயே!

விரிப்பு : இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக் கல்விக் காலத்துத் தமிழ் காக்க முன் நின்று உயிர் துறந்த இளவல் அரசேந்திரன் நற்றாயைத் தேற்றிப் பாடியதாகும் இப் பாடல். -

தேறுக நெஞ்சம்.நின்றே! - பெருமிதத்தால் உயர்ந்து நின்று, நின் நெஞ்சத்தைத் தேற்றிக் கொள்வாயாக. இளங்கிளர் உணர்வின் ஏந்தலன் தாயே, தேறுக நெஞ்சம் வீறுகொள நின்றே” என்று கொண்டு கூட்டுக. நின் மகன், பிறர்போல், இயற்கையான் வரும் பொதுவான இறப்பால் நின்னைப் பிரிந்து சென்று விடவில்லை. செம்மாப்புற்ற ஒரு கொள்கை நோக்கி அதனைச் செயற்படுத்தும் பொருட்டாக உயிர் துறந்தனன். எனவே நீயும் ‘எல்லாரையும் போல் அவன் இறப்புக்காக வருந்த வேண்டுவதில்லை.அவன் பெற்ற பெருமையை எண்ணி, நின் அழுங்கல் நெஞ்சத்தைத் தேற்றிக் கொள்வாயாக என்று தெருட்டியதாகும்.

ஈற்றப். இசையே அழிவால் முடிவுறாத சிறந்த தன்மையுடையதாய், இவ்வுலக இறுதிவரை விளங்கி நிற்பதாகும் நின் மகனுடைய புகழ்,

என்னை; மொழிக்கு உறுதி சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோனது மொய்ம்புகழ் அம்மொழி யுள்ளளவும் நின்று நிலைபெறுவதாகுமன்றோ ! ஆகவே, தமிழ்மொழி இவ்வுலகுள்ளளவும் நிலைபெறுவது போல், அவன் புகழும் நின்று நிலை பெறும் என்க.

மூத்தோர் - அறிவின் முதிர்ந்த தொன்மையோர்; சான்றோர்.

மரபின் யாத்த முத்தமிழ் - வழி வழி முறைமையால் நிலை பெறுவித்த மூவியல் தமிழ். யாத்தல் நிலை பெறுவித்தல்; கட்டு வித்தல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்துறுப்பிலக்கண வகையால் கட்டுக் கோப்பு செய்விக்கப் பெற்ற, இயல், இசை, நாடகமெனும் மூவியல்பானாகிய தமிழ் மொழி!

என்னை முதலொலி எழுத்துகள் இன்னின்ன வென்றும், அவை தழுவி வரும் மூலச் சொற் கூறுகள் இவை யிவை என்றும், அவற்றான் புறப்பாடுறுவனவும், புலப்பாடுறுவனவும் ஆகிய பொருண்மொழிக் கோள்கள் இவை யிவை யென்றும், சொல்லும் பொருளும் நிரலுற நிறுத்தி, உளமும் உறனும் துலக்குறக் காட்டி, அழகும் பழகும் உணர்வொடு புணர, காலமும் இடமும் கடந்து நிலை பெறுஉம், சிறந்தோர் நெய்யும் செய்யுள் அமைப்புகள் இவையிவை யென்றும், அவை ஏய்ந்து வரும் சொல்லும் பொருளும் மிளிரத் தோன்றி, மணிவகை போலும் மல்கி நின்ற, அணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/272&oldid=1221133" இலிருந்து மீள்விக்கப்பட்டது