பாவலரேறு பெருஞ்சித்திரனார்
255
மறந்தும் இறந்தும் காணப்படும் தன்மைகளைச் சரி செய்து அவற்றைத் தற்கால அறிவியல் வளர்ச்சிக் கேற்பப்) புதுமை செய்து,
மலர்த்தும் - அதனை எதிர்கால நிலைப்பாட்டுக்கு உரிய வகையில் விரிவும் மலர்ச்சியும் உறும்படி செய்கின்ற.
மாணவர் அறவினை - (மாணவர்தம் எழுச்சியை வன்முறை என்று இகழாமல், புதியதோர் உலகு செய்யும் புரட்சிப் பணியாகிய) கூர்தலற மேம்பாட்டு உழைப்பு என்று கருதி.
மகிழார் - இவ்வாறு ஒர் எழுச்சி வந்ததே என்று எண்ணி மகிழ மாட்டாதவர்கள்.
கோணை அரசியல் - நேரல்லாமல் வளைந்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடித்து நடத்தப் பெறும் இக்கால வல்லாண்மை அரசியல் தன்மையின்,
கொள்கையினோரே - கொள்கையைக் கொண்டவர்களே!
இப்பாடலின் வரலாற்று நிகழ்வினை முன்னைய மூன்றுபாடல் களானும் உரைகளானும் கண்டு கொள்க.
மாணவர்களின் எழுச்சி அறமுடைய செயலன்று என்று மனமும், முகமும் சுளுக்குவார், கைதேர்ந்த அரசியல் கரவுடையவர்களே அன்றி, உண்மையின் தமிழ் மொழியின் சிறப்பியல்களை அறிந்தாரல்லர் என்று தெளிப்பான் வேண்டி உரைத்தது என்க.
இப்பாடல் முன்னது திணையும், முதுமொழிபேணல் என்துறையும் என்க.
திணையும் துறையும் புதியன.