பக்கம்:நூறாசிரியம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261

நூறாசிரியம்261

சீற்றத்தை ஆற்றக்கூடியவரோ! எவரும் இல்லை என்பதாகப் பொருள் கொள்க.

அரைசு ஆள்... நெஞ்சினன் - அரசு ஆளுகின்ற இழிமையும் சிறுமையும் கொண்டு, தவறான நடவடிக்கைகளையே ஆராய்கின்ற உளத்தினன் பக்தவச்சலன் என்னும் முதலமைச்சன்.

பறைவாய் தெறிக்கும் - பறைபோலும் முழங்குகின்ற அடக்கமிலாத வாய்.

பெயரா விருக்கை நினைவில் தப்பி - தன் பதவியழுத்தத்தின் ஆசையால் அதனின்று அசையாமல் குந்தியிருந்த இருக்கையின் நலத்தினால், தன் நினைவில் தவறியும்.

வடவர்ப்பணியும் முடவெள்ளறிவின்-தனக்கு ஆட்சி நிலையில் மேலராகிய வடநாட்டு நடுவணரசினர்க்குப் பணிந்து போகின்ற கோணலான வெள்ளிய புல்லறிவினோடு.

இட்ட போக்கிற்கு இடராக் காவலர்- அவன் இடுகின்ற கட்டளைகளுக்குச் சற்றும் மாறாக நடவாத காவல்படையினர்.

சுட்டுக்கிடத்திய - துமுக்கியால் சுட்டுக்கிடத்திய செந்தமிழ்ச் சிறாஅன் - செந்தமிழ்காக்கும் இளையோனாகிய, வளங்கூர்நாவின் இளங்கோ-வளமையும் கூர்மையும் உடைய நாவினான இளங்கோவன் என்னும் மாணவன்.

மருந்தகத்து உளைந்து உயிர்துறப்ப - மருத்துவ மனையின்கண் துன்புறக்கிடந்து உயிர் துறந்ததனால்,

புடைந்து - அளாவியெழுந்த மாணவர்கள், கற்பத் தூக்கிய சுவடி வீசி - தாங்கள் கற்பதற்காகத் தூக்கிக் கொண்டு சென்ற நூற்சுவடிகளை ஒருபுறத்தே வீசியெறிந்துவிட்டு,

வெற்புத் தோளில் விறவேற்றி - தங்களின் மலைபோலும் தோள்களில் வீரத்தை வருவித்துக் கொண்டு.

தெறுவிழியில் திபேற்றி - கனல்கின்ற விழியில் தீயினை ஏற்றிக் கொண்டு. செந்நாவில் செற்றத்தார் - தங்களுடைய கல்வியிலும் செவ்விய நாவில் சினத்தை உடையவராக.

செவ்விய நாவில் சினத்தை உடையவராக என்றது, கொதிக்கின்ற கடுமையான உரைகளை முழக்குகின்ற தன்மையராக என்றற்கு

உண்ணாவி அறக்கழல் - உள் உள்ள உயிர் அறவே கழன்று வெளியேறும்படி, உயிர் போகின்றவாறு முழங்கிச் சென்றார்கள் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/287&oldid=1221147" இலிருந்து மீள்விக்கப்பட்டது