பக்கம்:நூறாசிரியம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

262

ஒருகுவிற் பல்நூறாய்ப் புற்றியல் புறப்பாட்டின் - ஒரு முறை சூலுற்று வெளிப்போந்த பலநூறு ஈசல்கள் புறப்பட்டு வெளியேறுதல் போல்.

கதிர்கொன்ற களமென்ன - கதிர்களைப் பிடுங்கி எறிகின்ற நெற்களம் போல்.

எதிர்நின்ற மரம் வீழ்த்தி - எதிரதாகத் தென்பட்டு நிற்கின்ற மரங்களையெல்லாம் வீழ்த்தியவாறு.

ஒச்சு முகத் தடக்கையின் ஒச்சியவாறு முகத்தின் மேல் வைத்த பருத்த தும்பிக்கைகளை நீட்டிக் கொண்டு.

காச்சிதர்க்கும் களிறன்ன - காட்டை அழிக்கின்ற ஆண்யானைகளைப் போல்.

மலையெரி வாய்பீர்ந்து அன்ன-எரிமலையின் வாயினின்று பீச்சியடித்துச் சிதறுதல் போன்ற,

உலை நெஞ்சின் - கனற்குழம்பின் நெஞ்சுகளை உடையவர்களாகி வெளியேறி - (அண்ணாமலை பல்கலைக் கழகக் கட்டிடத் தினின்றும்) வெளியே போந்து.

புதுப்புனலின் கனல் போகி - புது வெள்ளத்தின் பொங்குகின்ற சினத்தவராகிய போக்குடையவராகி;

கொதிப்புறு நறுநெய்யாக - கொதிக்கின்ற நல்ல நெய்யைப் போல்.

விதிiப்புற - பார்க்கின்ற பிறர் நடுக்கமுற

படைப்புலம் எதிர்ந்த ஞான்றே - அக் காவலர் படைகளை எதிர்த்துப் போரிட்ட பொழுதில்

இந்தியெதிர்ப்புப் போரில் இளங்கோவன் காவலரின் குண்டடிபட்டு. மருத்துவமனையில் உயிர்துறந்தான் என்று கேள்வியுற்ற அளவில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துப் பயின்ற அவனின் ஒருசாலை மாணவர்கள், கிளர்ந்தெழுந்து, கொதிப்புற்று, அக் காவலர் படையை எதிர்ந்து போய்ப் போராட்டம் நடத்தியதன் சூழலை விளக்குவதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது தினயையும் பயில்வோர் எழுச்சி என்துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/288&oldid=1221149" இலிருந்து மீள்விக்கப்பட்டது