பக்கம்:நூறாசிரியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3


விரிப்பு :

ஒன்றே - என்றதால் முதலும் முடிவும் அற்றது; தலையாயது; இரண்டு மூன்று என்ற எண்ணுப் பொருளற்றது; தனிநிலையானது; ஒன்றின் விரிவே பலவும் என்றாகி, பலவின் முடிவே ஒன்று என்றாகும் சுழற்சியின் இயல்வது என்க. இஃது இன்மைக் கொள்கையையும் பன்மைக் கொள்கையையும் மறுத்தது.

இறை - என்றது இறுத்த நிலையது’ எனற்கு இறுத்த நிலை இறுதிநிலை. இறு ஐ-முடிவும் தலைமையும் வாய்ந்தது. தலைமை முதல்நிலை ஒன்று காரண நிலை; இறை கருமநிலை,

உலகம் - உருள் நிலை கொண்ட ஓர் அகம், உல -+ அகம். அகம்-அகப்படுத்தி நிற்பது. உலத்தல் - சுழற்சியுடைமை. உருளல் தன்மை.

உண்டு - இல்லையென்பார்க்கு மறுப்பு தேற்றம் கருது பொருளாகிய ஒன்றுக்குக் காட்சிப் பொருளாய் நின்று உலகம் உண்டு என்று காட்டியது.

அதன் வழி - என்றது அவ்வொன்று வழியாய் நிற்றலை, நிலையும் இயக்கமும் அதன் வழியாம் என்றவாறு,

நன்று - தொடக்கமும் முடிவும் நன்மைக்கென்றவாறு என்னை? துன்புந் துயரும் நன்மைக்கோ என்பார்க்கு துன்பந்துயரும்.அதன் வழித்தாய அல்ல என்றும், உயிர் போங்கு நிலையின் ஏற்றத்தும் இறக்கத்தும் நின்றும் சுழன்றும் செல்லல் தோற்றமே என்க. துன்பும் துயரும் மனக் கோட்டமே! துன்பம் சூழலால் வந்துற்ற தாக்குநிலை, துயர் உயிர்ச் சூழற்கு உட்பட்ட தாங்கு நிலை. துன்பு புறப்பாடு, துயர் அகப்பாடு. இவ்விரண்டும் கோட்ட நிலையால் உயிர்க்கு அசைவு நிலைதரினும், அவ் வசைவு நிலையும் முடிவுகருதி இன்பமே ஆகும் என்னை? துன்பம் உயிர் தன்னை உணரு நிலை; இன்பம் உயிர் தன்னை மறக்கு நிலை! இவையே உயிர் மயங்கு நிலையும் உயிர் மயங்கு நிலையுமாம்.

இதன் வாழ்க்கை - அதன் வழித்தாய வாழ்க்கை. ஒன்று வழி உலகும் உலகு வழி வாழ்வும் அமைவதாம் என்க.

நாம் - அறிந்து உணரத்தக்கவராகிய நம்மை உட்படுத்தியது.

அதன் மக்கள் - அவ்வொன்றின் வழித்தாய மேனிலை உயிர்கள்.

காட்சியும் கேள்வியும் கருதலும் புரிதலும் - உயிர்த்தோற்றத்து முதல் விளக்கம் காட்சியறிவே! என்னை; உயிர்த்த உயிர் காட்சியின் பாற்பட்டே அறிவை வழிப்படுத்தும். கண்ணிற்பட்ட காட்சி அவ்வுயிர்க்கு அறிவின் முதல் படிவு. அதன் பின் கேள்விவழிச் செயல்படுகின்றது. இவ்விருவழியறிவும் விரிந்த பின்னரே மகவு கருதுதல் செய்யும். கருதுதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/29&oldid=1234703" இலிருந்து மீள்விக்கப்பட்டது