பக்கம்:நூறாசிரியம்.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

267


பொழிப்பு:

பாடுவீராக, புலவரீர் பெருமிதம் தோன்றும் படி யாக (இது போலும்) பாட்டினை. இது செய்க என்று கட்டளையிடார்(எனினும்) , அரசினரின் எண்ணம் இதுதான் என்று தெரிந்து செய்யத் துணிந்துவிடுகின்ற காவலர்கள் போலும், (இருக்கின்றீர்கள்) நீங்கள். (என்) வீட்டிற்குள்ளே (கேளாது) புகுந்து, யாரைத் தேடுகின்றீர்கள். என்று கேட்டதும், (அதற்கு அக்காவலர்கள்). அம்மையீர், (தமிழ்நாட்டின் கண் வந்து} பரவுகின்ற சிறுமொழி(யாகிய இந்தி)யை, (அவ்வாறு பரப்புதலை விரும்பாமல்) கண்டித்து, ஒன்று கூடி, கடந்த பதினெட்டு நாள்களாகக் கடைத்தெருக்கள் துாளிபடவும், அச்சங்கொள்ளும் (படி நடக்கும்)ஆரவாரங்களும், போராட்டங்களும், (அதன் விளைவாகக் காவலர்தம்) துமுக்கிச் சூடுகளும்இவ்வாறாக ஊரே அமர்க்களப்படும் நிலைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் போல் தெரிகிறது.’

‘(எனவே) கல்விபயிலும் இடங்களிலெல்லாம், புன்மையான செயல்கள் புகுந்தவாறு, நூல்களை எடுத்துச் சென்று பயில வேண்டிய மாணவர்கள், எங்களைக் கவடி விளையாடுகின்றவர்களைப் போலும் ஆட்டங் காட்டுகின்றனராக! அதனால், யாங்கள் உண்ணும் உணவையும், உறக்கத்தையும் அறவே கைவிட்டவராகப், பகலும் இரவும் (கண் விழித்துக்) காவல் செய்ய வேண்டியுள்ளதையும், தாங்கள் காணவில்லைபோல் இருக்கிறது.’

“இப் பக்கத்துத் தெருவில் எழுச்சிகொண்ட கூட்டத்தின் (ஆரவாரத்தில்) எம் காவலன் ஒருவனை முன்பல் தெறித்துவிழவும், அதனான் குருதி பீறிடவும், ஒரு கூரிய கல்லை எடுத்து வீசிவிட்டு, விரைந்து (ஓடிவந்து) இப்புறம் நுழைந்து, சிவந்த கண்களை உடைய ஒர் இளந்தையன், உங்கள் வீட்டின் உட்புறமாக ஒளிந்து கொண்டானாக அவனைப் பிடிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம்; (அவன் எங்கே இருக்கிறான்) என்று காட்டுங்கள்” எனவும்:

அம் முதியவள் உடல் நடுக்கத்துடன் எழுந்து, வீட்டின் முன்பகுதியிலும், உள்புறத்தும், (பின்னுள்ள) சமையற்கட்டிலும், (அவர்களை அழைத்துச் சென்று, அவன் இல்லாததைக் காட்டி), 'எங்கே போயிருப்பான் என்று ஒன்றும் கண்டுபிடிக்கக் கூடவில்லையே' என்று கூறினாளாக. அதனால் வந்திருந்த காவலர், மனம் நிறைவுற்றுச் செல்லலும், (அதன் பின்னை அவள்) வீட்டிற்கு உள்ளாகச் சென்று, நெல்லை நிறைத்து வைக்கும் குரம்பையின் உள்ளே ஒளியச் செய்வதற்காக இறக்கிவிட்ட, புல்லிய மென்தலையினையுடைய சிறுவனைக் கூவி அழைத்து வெளியே தூக்கிக் கொணர்ந்து, 'தமிழன்னைக்கு வந்த துயரத்தைக் கடிந்து நின்றாயே! நின்னை யான்) மகனாகப் பெறாத பதடியாகினேனே’ என்று கூறி அவனது இளந்தலையினை முகர்ந்து மூங்கில் போலும் இளந்தோளை நீவிக்