பக்கம்:நூறாசிரியம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

271


செல்கென விடுத்த சீர்மை நினைந்தே - நீ சென்றுவிடுக என்று விடுத்த சிறந்த செயலை எண்ணியே; (பாடுக புலவர் பீடுடைப் பாவே என்று புணர்த்துக)

இளம் உள்ளம் ஒன்றின் தாய்மொழிப்பற்றையும், அவர்களை வேட்டையாடிய காவலர்களின் கொடுமையையும், அவர்களை ஆட்டிவைத்த அரசினர்தம் அச்சுறுத்தும் தன்மையையும், போராட்டம் நடந்த காலத்து, அதில் ஈடுபட்டாருக்குப் பொது மக்கள். துணையாயிருந்து, காத்தொழுகிய சீர்மையையும் வெளிப்படுத்தி உரைப்பதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது திணையும், செந்தமிழ்ச்சீர்மை என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/297&oldid=1221449" இலிருந்து மீள்விக்கப்பட்டது