பக்கம்:நூறாசிரியம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

நூறாசிரியம்

தப்பிப்போய், உண்டது வாய் வழியாகவும், செரித்தது கருவாய் வழியாகவும் ஒலியுடன் வெளியேவர, கண்கள் ஒளி அவிந்துபோக முன்னர் இருந்த நல்லநடையானது தடுமாறிநகர்ந்தும், படுகிடையாய்க் கிடந்தும், பருவுணவு. உண்ட நிலை மாறி, நீர்ம உணவும் கொள்ள வியலாமல், இன்னொருவர் புகட்டிய நீர்ம உணவும் புறக்கடை வழியாக ஒழுக, வெள்ளை விழி மேலே ஏறவும், அறிவானது மங்கிப் போகவும், மெல்ல மெல்ல ஆவியானது கழிகின்ற மேலை வரும் நாளில், தாம் இறுதியாகப் படுத்திருந்து உயிர் போகிய இடத்தைப் பார்த்து அழுகின்ற, பெருந்திரளான மக்கள் தம் வாழ்நாளிலும், தாம் பெறப்போகின்றது இந்நிகழ்ச்சி தவிர வேறொன்றுமில்லை எனும், இழிவு மிகுந்த இவ் வாழ்வின் முடிவுக்கு அஞ்சியோ, மகனே, தீயில் குளித்துத் தமிழ்மொழியுடன் என்றும் சிறப்புற சாகா நிலையில் இருக்கின்றாய், நீயே!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இதுவும் முந்தயை பாடல் காலத்து நடந்து வியப்புக்குரிய ஒரு செயலைப் பாராட்டியதாகும்.

தீக்குளியல் செய்த தேவனுர்ச் செம்மல் சிவலிங்கத்தை உடல் நிலையாமை முன்னிருத்திப் பாடியது. -

புனையினும் அணிகளைப் பொருந்தப் பூட்டியும் மேலுற அணிந்தும், உடுக்கை உடுத்தும், மண நெய்யுந் துளும் பல பூசியும் உடலைப் புனைவு (அழகு செய்யினும்.

பூட்டு எலும்புகளாலும், தசைகளாலும், நார் நரம்புகளாலும் தோலாலும் பூட்டப்பெற்ற இவ்வுடல் சேர்க்கையானது.

கழலற அறக் கழன்று கட்டமைப்புக் கழன்று.

மிசையினும் பலவகையான பண்டங்களை உண்ணினும்.

மேணிதிரங்கல் - உடலானது காலத்தால் காய்ந்து கருங்குதல்.

ஒம்பினும் . இதன் நலன்களைப் பலவாறு பேணிப் புரந்தாலும், வன்மை வலிமை;

காலத்து ஒழியும்- காலத்தால் இல்லாமற் போகும்.

சாம்பினும் - ஒடுங்கிப்போயினும்

அழலுன - அழல் உண்ண சாம்பர்சாம்பல்

ஒக்கல் - உறவினர். பொருந்தியிருப்பவர்.

முக்கல் - காற்று வெளியேற வலிந்து முயலுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/302&oldid=1209147" இலிருந்து மீள்விக்கப்பட்டது