பக்கம்:நூறாசிரியம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

277

முனகல் - சிறிது சிறிதாகக் காற்று வெளியேறும் ஒலி.

அடர்ந்து நா புலர்ந்து -நா வறண்டு உலர்ந்து போய்.

உரை தப்பி - உரை மாறுதல் - தவறுதல்.

கக்கலும் கழிசலும் ஆல- உண்டது மேல் வாய் வழியாகவும் செரித்தது கீழ்வாய் வழியாகவும் ஒலியெழுப்பி வெளியே வர.

கண்ணவிந்து - கண் ஒளி இழந்து.

நெற்றி- தடுமாறி.

நகர்ந்தும் கிடந்தும்- இயன்றவழி நகர்ந்தும், இயலாவழிக் கிடந்தும்.

திண்மமும் மாறி நீர்மமும் கொள்ள - பருப்பொருள் உணவும் தவிர்ந்து,நீர்ம உணவும் கொள்ளமுடியாமல்,


புறங்கடை வாயில்- வாயின் புறத்துள்ள கடைவாயில்

புகட்டியது ஒழுக - பிறரால் நீர்ம உணவாகப் புகட்டப் பெற்றது, உள்ளே போக இயலாமல் ஒழுகும்படி

வெள்விழியேறி - கண்களின் வெள்ளை விழி மேலேறி நிற்க,

அறிவு வெளிறி- அறிவுணர்வானது அறவே இல்லை என்று ஆகும் படி இல்லாமற் போக

வெள்ளை விழி மேலேறிக் குத்திட்டு நிற்பதும், அறிவு அறவே இல்லாமற் போவதும், இறப்பின் இறுதி நிகழ்ச்சிகள்.

மெலமெல ஆவி கழிவுறு மேனாள் - மெல்ல மெல்ல ஆவி கழிந்து போகின்ற அடுத்து வரும் இறுதி நாள்.

இருந்து போகிய இடம்- இறுதியாகச் சாப்படுக்கையில் படுத்திருந்து உயிர்விடும் இடம்.

பாத்து அழும்-இந்த இடத்தில்தானே அவர் படுத்திருந்து உயிர்விட்டார் என்று உறவினர் பார்த்து அழுகின்ற இடம்.

பெருந்திரள் மாக்கள் பெறுவதும் இலையெனும்- மிக்க அளவில் திரண்ட மக்கள், தாங்கள் தங்கள் வாழ்வில் இறுதியாகப் பெறப்போவதும் இம் முடிவைவிட்டு வேறொன்று இல்லை என்னும்.

இழிதகைக்கு இழிவான தன்மைக்கு,

அஞ்சியோ இதுபோலும் இழிவான வாழ்க்கைக்கு யானும் ஒருப்படுவதோ என்று அஞ்சியோ,

தழல் குளித்து - நெருப்பில் குளிப்பது போல் மூழ்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/303&oldid=1209150" இலிருந்து மீள்விக்கப்பட்டது