பக்கம்:நூறாசிரியம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

நூறாசிரியம்

கிடக்கின்ற) இவன், வடவர் திணித்த வளராத மழுங்கல் மொழியாகிய இந்தி மொழியைக் கடிந்து தடுப்பதற்குத் துணிந்து நின்று, அவ்வுணர்வைக் காட்சியின் அளவில் காட்டுதற்கு உடலில் தீக்கொளுவிக் கொண்டு, தன் உயிர் தீந்தமிழுக்கெனக் கொள்கையை முழக்கிய சிறந்த வீர மகனாகிய, விருகாம்பாக்கம் என்னும் ஊரினனான அரங்கநாதன், ஆவான்.

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இதுவும், முந்தைய பாடல் காலத்து நடந்த வியப்புக்குரிய ஒரு செயலைப் பாராட்டியதாகும்.

இந்தியெதிர்ப்புக்காக, தீக்குளியல் செய்த விருகாம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதனைப் பாடியது.

பாரிய - பரந்த,

புழுதி துவைய - புழுதி தோயும்படி தரையில் புரள,

தலைதரை கிடத்தியும் - தலையைத் தரையில் மோதி முட்டி அழுதல்,

மார்பு எற்றுதல் - மார்பில் கைகளால் அடித்துக்கொண்டு அழுதல்,

செவ்விழி உகுநீர்நனை வாய் அரற்றி - அழுது சிவந்த விழிகளிலிருந்து உகுக்கின்ற கண்ணிரால் நனைந்த வாயால் புலம்பி அழுது.

எரியுண் மூங்கில் இணைகொடி யாகி - எரியால் உண்ணப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்ற மூங்கில் மேல் இணைந்து சுற்றிய கொடி எவ்வாறு அதுவும் கருகிக் குலைந்து போகுமோ, அவ்வாறு குலைந்து நிற்கின்ற கொடி போன்றவள் ஆகி.

இனித் துனை யறியா - இனிமேல், வாழ்வுத் துனை யறியாத,

தந்தை கொள்கை - தங்கள் தந்தையின் கொள்கையாகிய இந்தியெதிர்ப்பை,

தாமறிகள் லாது - தாங்கள் அறியாமல்,

அழுங்கல் ஆற்றுதல் - அழுகையைத் தேற்றி அடக்குதல்,

எதிர்ந்த சூழல் - இக்கால் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலை.

அதிர்ந்த நெஞ்சொடு - அதிர்ச்சி யடைந்த உள்ளத்தொடு,

விசித்தழா நின்ற - தேம்பியழுது நிற்கின்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/306&oldid=1209155" இலிருந்து மீள்விக்கப்பட்டது