பக்கம்:நூறாசிரியம்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

288

மறுகின் ஆடிய குறுநுதல் - தெருவில் இறங்கி விளையாடிய சிறிய நுதலையுடைய இப் பெண்.

நெருநல் பொழுதில், மரப்பாவைக்கு ஆடையுடுத்து முத்து மாலை அணிவித்து விளையாடிய இச் சிறுபெண், அவ்விளையாட்டைப் போலவே இவ்வுடன் போக்கையும், இவள் கணவனையும் கருதி, மேற்கொண்டாள் போலும் என்று புலம்பினாள் என்க.

பறந்திய சென்றது - வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதைக் கூட்டைவிட்டுச் சிறகு முளைத்த பறவை பறந்து சென்றதுபோல் என்று கருதிக் கூறினாள் என்க. இய-விரைவு அசை

யார் கொளப் பயின்று - யார் பயில்வித்துப் பயின்று கொண்டு.

தான் வளர்த்த அருமை மகள், தான் பெற்ற அன்னை தந்தையரையும் உற்றார் உறவினரையும் இத்துணை விரைவில் துறந்தும் மறந்தும், புதிய உறவான காதல் இளைஞனுடன் வேற்றுார் சென்றாளே, இம் மனத்துணிவை வருவித்தவரும் பயில்வித்தவரும் யாரோ அறிகிலேனே என அலமந்து புலம்பினாள் செவிலி என்க.

இப்பாடல் பாலைத் திணையும் செவிலி புலம்பல் என்னும் துறையும் என்க.