பக்கம்:நூறாசிரியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நூறாசிரியம்


பிறர்க்கும் கொடுமின்கள் என்றவாறு என்னை? நம் போலும் எல்லவர்க்கும் ஈத்த கொடைக்கு மேலும் நாம் ஈதற்கு நமக்கு என்ன ஆற்றலுள்ளது என்று அடக்கவுரை செய்யும் சான்றோரும், என்ன பொருளுள்ளது என மடப்பவுரை செய்யும் மடவோரும் வினாவெழுப்ப இது கூறியதென்னை எனின் கூறுதும். நிலையாலும் நினைவாலும், வினையாலும் வாய்ப்பக்கிடந்த எல்லாப் பொருளும் இவ்வுலகத்து எல்லார்க்கும் ஒப்பக் கிடைப்பதும், அவ்வாறு கிடைத்துழி அவ்வெல்லவரும் அவற்றை நுகர்தல் இயல்வதும் அரியவாகையால், ஒருபால் தொட்ட ஊற்றுநீர் பிறர்க்கும் மடுப்ப உரிமைபோல் அவன்பாற் கொடையாகப் பெற்ற இவ்வுலக உடைமை இங்குள்ளார் யாவர்க்கும் ஒப்பக் கொடுக்கும் உரிமை உடையது. என்னை? வலக்கை பெற்றது இடக்கையும் எடுத்து உண்ண உரிமை உடையது போல் ஒருடற் பல்லுறுப்பாய் இயங்கும் இவ்வுலக உயிர்கள் யாவையினுக்கும் ஈண்டொருவற் பெற்ற ஈட்டம் என்க.

அவன் குற்றுயிர்க்கு எல்லாம் - அம்மெய்ப்பொருள் வழி முகிழ்த்தலர்ந்த குற்றுடலும், குறையுறுப்பும், குற்றறிவும் குறுவிளைவும் குறுவாழ்வும் வாய்ந்த உயிர்கள் தொகை யாவினுக்கும்.

எள்ளுமின் உள்ளம் இகழ்வன - இவ்வுடற்கண் நின்று நிலவும் உறுப்புகளுக்கெல்லாம் உள்ளுறுப்பாய் நின்று, மெய்ப்பொருளின் தேக்கிடமாய் இயங்கும் உள்ளம் சிறுமை கருதியும், வெறுமை கருதியும் இகழ்ந்து ஒதுக்குவனவற்றை நீவிரும் இகழ்ந்து விடுமின்கள் என்றவாறு.

இகந்துதள்ளுமின் பழித்து, தும் பற்றினின்றும் விடுவியுமின்கள். இகத்தல்- பழித்தல்-கடந்து மேற்செல்லல்- விட்டுப் புறம் போதல்வெறுத்துத் துறத்தல்,

தனித்தவன் - தன்வயம் நின்றவன் - பிறர் அசைவு நிலைக்கு வயப்படாதவன் - ஒன்றன் ஒருபெருந் தனிப்பொருள்.

திறல் - வலிமை - மெய்யறிவு - மேன்மை, பொருந்துமின்-இரண்டன்மை நிலையில் இணையுமின்கள் அவனாக நின்று நடத்த நம்மை ஒப்புவிப்பது - நம் செயல் கழலுதல்,

வாழ்க்கை பொன்றாதார் வாழ்வாம் எனப்பட்ட இயங்குநிலை சிதையாத எண்ணமுடையவர்கள்.

இப்பாட்டு, இறையுண்மையினையும், அதையுணரும் வழியையும், அதன்ை அறிந்த நன்மையையும் அந்நன்மையால் விளையும் மலர்ச்சியையும் கூறாதிற்கும், நிலைமண்டில ஆசிரியப்பாவாம்

இது பொதுவியல் என் திணையும், இறைநிலை வாழ்த்தென் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/32&oldid=1234706" இலிருந்து மீள்விக்கப்பட்டது