பக்கம்:நூறாசிரியம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

297

நூறாசிரியம்

போரில் ஈடுபட்டு, உடல்கள் சிதைதலும் உயிர்கள் சிதைதலும் ஆகி இடர் படுதலும்,

மூன்றது, அவ்வாறு இடர்ப்பாடுற்ற குடும்பங்கள் ஒன்றினைச் சேர்ந்த தானு’ என்னும் ஒரு கழி இளம்பெண், அங்குள்ள படையினரால் கற்பிழந்தும், அவர் குடும்பத்தினர் அழிந்து பட்டதும்,

நான்கது, அவ்விடர்ப்பட்ட தானு, அறவுணர்வு தழுவிய மறவுணர்வு கொண்டு, தானும் தன் குடும்பும் இனமும் தாக்குண்ட கொடுமை பொறாதவளாகி, வெகுண்டு அவற்றுக்கெல்லாம் காரணனாகிய இராசீவ் என்னும் வீணனை அழித்தொழிக்கும் உள்ளத்தினும் உயிரினும் நிலைத்த பழிவாங்கும் கடுஞ்சினத்துடன் இந்தியா வந்து, தமிழகத்தில் சுற்றுச் செலவு மேற்கொண்டிருந்த இராசீவை, தன் உடலில் வெடிகுண்டு பொதிந்திருக்க நெருங்கி மோதி, மக்களெல்லாம் கூடியிருந்த கூட்டத்தின் நடுவில், அழித்தும் அழிவுண்டும் மாய்ந்ததும் -

- ஆகிய நான்கு செயல்களையும் உள்ளடக்கிக் கூறியதாகும் இப்பாடல்.

இந் நான்கு செயல்களும் ஒன்றின் ஒன்று அவலம் மிகுந்தது. இறுதிச் செயலாகிய தானுவின் தன்னழிவு மறம், கொடியன் ஒருவனை அழித்ததோடு தொடர்பு கொண்டதாகலின் ஈகவுணர்வால் பொருந்திய புகழ் கொண்டது. அதனால் உலகை ஈடு கொள்ளாப் பெருமை சான்றது.

இதில், தானு வென்னும் வீரத் தமிழ்ப்பெண், காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை என்றும், அன்னைக்குக் குலத்து ஒர் அறங்கூர் மறத்தி என்றும், புகழப்பெறுவது, அவளின் இளம் பருவத்தையும், முது செயலையும் இணைத்துப் பார்த்துப் பெருமை சாற்றுவது.

ஒரு தனி நின்றே ஊர்நடு சிதைத்த ஈகம்'என்னும் தொடருள் வரும், ஒரு தனி என்பது, அவள் தனித்து நின்ற செம்மாப்பையும், ஊர் நடு சிதைத்த’ என்பது, யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அன்றி எல்லார்க்கும் முன்னழித்த செந்துணிவையும், ஈகம்’ என்பது, அவள் உலக வெறுக்கையையும் கூறி, அவள் மனவுணர்வையும், இனவுணர்வையும், கொள்கை நிலையையும், இளமைப் பருவத்தையும் ஒருங்கே புலப்படுத்தி வீரத்தையும் அவலத்தையும் இணைத்துக் கூறியது என்க!

மானமும் உயிரும் வாழ்வும் கருதி - தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே, அங்குள்ள தமிழ்ப் பொது மக்களுக்குப் பலவகையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன: ஏற்பட்டு வருகின்றன.

அத் தாக்கங்களால் தொடர்ந்து உயிரழிவுகள் நேர்ந்து வருகின்றன. அவர்களின் வாழ்க்கை நலன்களும் சீரழிக்கப்படுகின்றன. குடியிருப்புகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன். சொத்துகள் கொள்ளை யடிக்கப்படு கின்றன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதில் சிறுமியர், இளம் பெண்கள், திருமணம் ஆன மங்கையர், கருவுற்ற தாய்மார்கள், முது-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/323&oldid=1221401" இலிருந்து மீள்விக்கப்பட்டது