பக்கம்:நூறாசிரியம்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

நூறாசிரியம்


அறத்திற்கே அன்புசார் பென்ப் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. -76

அன்பும் பண்பு வினையுமே அறம் ஆகையால், மறவுணர்வுக்கும் அன்பு அடிப்படையாக உள்ளது.

தானு, தன்இன மக்கள்மேல் வைத்த அன்பு தொண்டுணர்வாக (அறவுணர்வாக) மலர்தலுற்றுத் துணிவுற்று, வீரமாகி, மறவுணர்வாகக் காழ்த்து, தன் இனத்துக்குத் தீங்குசெய்த இராசீவை ஒழித்துக் க்ட்டுமளவிற்குச் செயலுருவம் கொண்டது என்க.

அறவுணர்வு கூர்தலுற்று (பரிணாமம் உற்று) மறவுணர்வாகக் காழ்த்து நின்றதால், தானு அறங்கூர் மறத்தி எனப்பெற்றாள்.

அவள் இராசீவைக் குண்டால் தகர்த்தது கொடுமை என்று தமிழின எதிரிகள் கூறுவது வரலாறு தெரியா வெறுங்கூற்றாகும். அஃது ஒர் அறமான செயலே அவன் செய்த கொலை அறவுணர்வு பொங்கியெழுந்து மறமாகி நின்று, செயல் கொண்டதன் விளைவாகும். அது தவறோ தண்டனைக்குரிய குற்றமோ அன்று. அவள் பின்னர்ச் செய்யப்போகும் இராசீவ் அழிவுக்கு முன்னர்க் கூறிய அமைவாக நிற்பது அறங்கூர் மறத்தி சொற்றொடராகும்.

தானு வென் பெயரினள் -தானு என்னும் பெயரை உடையவள். தானு என்னும் சமற்கிருதச் சொல்லுக்குக் காற்று, வெற்றியுடையவர் என்பன பொருளாம்.

தன்னினம் அழித்த வீணன் - தானுவின் இனமாகிய ஈழத்தமிழினத்தை அழித்திடச் செய்த வீணான செயலைச் செய்தவன் என்பது ஒரு பொருள்; இன்னொரு பொருள், வீழப்போகிறவன் (வீழ்நன்-வீணன்), ஒ. நோ. வாழ்நன்- வாணன்), என்பது இச்சொல் தானுவால் வீழ்ந்து அழிந்தவன் என்னும் பொருளையும் முற்காட்டித் தந்தது என்க. இராசீவின் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் வீணன் என்றது, அவரது கொடிய தன்மையினால் என்க.

விணனுக் கெதிரா வெகுண்ட் வெஞ்சினம் - அந்த இராசீவ் என்னும் வீனனுக்கு எதிராக தானு வெகுண்டு எழுச்சி கொண்ட கடுஞ்சினம்; வெகுளுதல் இயல்பான சினம்; வெஞ்சினம் வெம்மையான சினம்; அழிவை உண்டாக்குவது ஆகலின் வெப்பம் சுட்டப்பெற்றது.

நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு - (உடலுறுப்பாகிய) நெஞ்சாங்குலையும், மூல உறுப்பாகிய உயிரியக்கத்திலும் நிலைப்புட்டு விட்ட அழிக்க முடியாத நினைவுடன் என்னை? நெஞ்சின் நினைவாக நிற்கும் ஓர் உணர்வு, ஒரு கால் மறந்து போதற்குரிய தாகலின், நெஞ்சில்