பக்கம்:நூறாசிரியம்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

303

ஏவிவிடப் பெற்ற அமைதிப் படையினரால், தன்னினமும், தன் குடும்பமும், தானும், அழிவும் இழிவும் பட்ட கொடுந் துன்பத்தால் வீறு கொண்டு, பழிவாங்கும் அறஞ்சார்ந்த மறவுணர்வெழுச்சியுடன், தமிழகம் போந்து, தானே ஒருத்தியாய் நின்று தன்னுடலில் கடுமையான வெடிகுண்டு ஒன்றைப் பிணித்துக் கொண்டு, தற்கொலைப் படையுறுப்பாகித் திருப்பெரும்புதூரில் 1991 மே மாதம் 21-இல் நடந்த தேர்தல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அவரை நெருங்கிக் குண்டை வெடிப்பித்து, அவரையும் சிதைவுறச் செய்து, தானும் உயிரழிந்து போன, பெருந்தமிழ் மறத்தி, இன மீட்புக் கருதித் தன் வாழ்வையே இழந்து கொண்ட வீராங்கனைதானு என்னும் தமிழீழத்தைச் சார்ந்த இளம் பெண்ணின் ஒப்பிடற் கரிய ஈகதியாகத்தைப் புகழ்ந்து பாடியதாகும் இப்பாடல்.

இது, மூதின்முல்லை என் திணையும் அறங்கூர் மறம் என்துறையுமாம். துறை புதியது.