பக்கம்:நூறாசிரியம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

305

நூறாசிரியம்

மெய்ந்நெறியைப் பின்பற்றுவோரே வாழ்க்கையில் ஈடேறுவோர் என்றும் விளக்குவது இப்பாட்டு.

எக்கர் இடுமணல் - யாறு அலையான் எற்றிக் குவித்த மணல் யாறு இடு எக்கர் மணல் எனக் கூட்டுக! யாறு வருவிக்கப்பட்டது.

புக்கு ஆங்கு - புகுந்து புகுதல் - பிறத்தல். இவ்வுலகிற் புதுவதாக வந்தடைதலின் புகுதல் எனப்பட்டது. புலம்பன் உடல்தாங்கி வருதல் எனினுமாம். ஆங்குஅசை,

பொன்றுநர் - இறப்போர்.

பலர் - எண்ணற்றோர். இதனையுணர்த்தற்கு எக்கர் மணலை உவமைகூறினார்.

அளிது அவர் பிறப்பு - அவர்தம் பிறப்பு இரங்கத் தக்கது. வாழ்க்கைப் பயனைப் பெற்று ஈடேறுதலின்றி வறிதே கழிதலின் பிறப்பு இரங்க்கத்திற் குரியதாயிற்று.

எளிது அவர்நிலையே - அவர்தம் வாழ்க்கை நிலையோ எளிமையுடைத்து. செயற்கு அரியன செய்யாது எளியன செய்தலால் அவர்தம் வாழ்க்கை நிலை எளிமையுடையதாயிற்று.

“செயற்கு எளியவாவன -உலகத் தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம்” என்ப.

ஒளிதக - அறிவுபொருந்த ஒளி சிறப்பாக மெய்யறிவைக் குறித்தது. தக: - தக்கிருக்க - பொருந்த

உள் கிளர்ந்து - மன எழுச்சியுற்று. அஃதாவது அறியாமையால் பழிப்படுவன செய்து இழியும் மக்கள் கூட்டத்தின்பால் கொண்ட இரக்கத்தால் அம்மக்களைக் கடைத்தேற்ற விழைதலால் எழுந்த உணர்வு.

மாணா வினை அற - நற்குண நற்செயல்களுக்கு மாறான இழிசெயல்களைச் செய்யாது நீங்க.

பழி - சான்றோரால் பழிக்கப்படுவன. முதனிலைத் தொழிலாகு பெயர்.

பஞிலம் - மக்கள் தொகுதி, பஞ்ஞிலம் என்னுஞ் சொல் தொக்குப் பஞிலம் என நின்றது.

அரிதின்-அரிய வினைப்பாட்டின்கண்.தந்நலந்தவிர்த்துப் பொதுநலங் கருதிச் சான்றோர் மேற்கொள்ளும் வினை அருவினை யாதவின் அதனை அரிது என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/331&oldid=1221167" இலிருந்து மீள்விக்கப்பட்டது