பக்கம்:நூறாசிரியம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

307

நூறாசிரியம்

மாய்ந்தாலும் இறப்பை வென்று என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக் கின்றனர் என அறிக!

உய்யுநர் - வாழ்க்கைத் துன்பங்களால் பல்லாற்றானும் அலைக்கழிக்கப் பட்டு அழிந்தொழியாமல் வாழ்க்கைப் பயனை முழுமையாகப் பெற்று ஈடேறுவோர்.

என்போர் - எனப்படுவோர் - என்று சிறப்பித்துச் சொல்லப் படுவோர். ‘இல்வாழ்வான் என்பான்’ என்றாற் போலச் செயப்பாட்டு வினை செய்வினை வாய்பாட்டில் நின்றது.

அவர் வழியோரே - அப் பெரியோர்தம் பின்செல்லியரே அவர்தம் வழியைப் பின்பற்றுவோரே என்றவாறு.

பின்பற்றுதலாவது அப்பெரியோர் வகுத்துரைத்த மெய்ந்நெறியில் வழுவாது ஒழுகுதலும், அவர் தொடங்கி நடத்திய அறவினை அல்லது அருந்தொண்டினைத் தொடர்ந்து செய்து வருதலும் அவர் இடைவிட்ட வினைப்பாட்டைக் கடைக்கொட்கச் செய்து நிறைவேற்றுதலும் ஆகும்.

இப்பாடல் புறத்தினைப்பொதுவியலும் பொருண் மொழிக் காஞ்சி என்னுந்துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/333&oldid=1221170" இலிருந்து மீள்விக்கப்பட்டது