பாவலரேறு பெருஞ்சித்திரனார்
313
அழகிய ஒளிவீசும் ஞாயிறு இயங்குமுறை தவறினும் முறை பிறழாத நேர்மையான தீர்ப்பு வழங்கும் அற மன்றங்களும் தம் இயல்பினின்றுங் குன்றிவிட்டன. நாடகமும் பிறகலைகளும் தீய இயல்புடையன ஆகிவிட்டன. பொலிவுற மேம்பட்டு விளங்கும் கற்பிற் சிறந்த மகளிருங்கூட மனநிலை திரிந்து மனைக்குரிய ஆளுமையைக் கைவிட்டு ஒப்பனையால் செயற்கை முடியை அணிந்து கொள்வார் ஆயினர். பல்லாற்றானும் வலிமை வாய்ந்தவர்களே மேலும் வலிமை பெற்றுள்ளனர்; மெலிவுற்றவர்களோ மேலும் மெலிவுபட்டுள்ளனர். குலங்கள் பல்வேறு சாதிகளாகக் கிளைத்துப் பற்பல கலகங்களைச் செய்கின்றன. தமக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு பிறர்படும் துன்பத்தைப் போக்கும் பொருட்டுக் குரல்கொடுப்போரும் செவ்விய நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவோருமான சான்றோர் பெருமக்களுக்குத் தக்க பாதுகாப்பு இல்லை. இத்தகைய சீர்கெட்ட நிலையினும் இழிந்த மகிழ்ச்சியின் பொருட்டு மனக்கருத்தை விற்று நல்ல இயல்புகள் அழியப் பெறுவோரும் தீவினைகளைச் செய்யக் கூசாதவர்களும் கைப்பொருள் ஒன்றையே பெரிதெனக் கொண்டு பேணிக் காக்கும் அறியாமை மிக்க வாழ்வுடையோருமாக இருக்கும் மக்கள் நிலையை எண்ணி யாம் வருந்துகின்றமையான் என்றவாறு.
விரிப்பு :
இப்பாடல் புறப்பொருள் பற்றியது.
நாட்டின் பல்வேறு இழிநிலைகளையும், மக்களின் சிறுமைப் போக்கையும் எண்ணித் தாம் வருந்தும் நிலையை வெளிப்படுத்திப் பாடியது இப்பாட்டு.
சாய்தலும் இல்லேம் - என்குவிராயின் நிற்றலும் இருத்தலும் ஆகிய நிலைகளை இயங்குவதற்கு ஏற்றவை யாதவின் இயக்கத் தவிர்தலைக் குறிக்கக் கிடக்கும் நிலையைக் கூறினார். சாய்தல்-படுத்தல்,
மனக் கவலையின் மெய்ப்பாடு கண்கசிதல் ஆகலின் நனைவிழி எனப்பட்டது. க்வலையால் வெதும்பும் உள்ளம் அக் கவலையை எந்நிலையிலும் மறத்தலாகாமையின் ‘மாய்தல் யாண்டையும் இலம்’ என்றார். மாய்தல் -மறத்தல்,
உள்ளமும் உடலும் அமைதிபெற வொட்டாது வருத்துதலின் தோய்துயர் என்றார். தோய்தல்-செறிதல்
குடிபுரந்து உவக்கும் கொற்றம் :அரசு குடிமக்களைப் புரத்தலாவது புறப்பகையான் வரும் போர்கள், அகப்பகையான் வரும் பூசல்கள், மற்றும் அதிகார முறைகேடுகள் இயற்கை ஊறுபாடுகள் முதலானவற்றை எதிர்கொண்டும் தடுத்து அடக்கியும் நெறிப்படுத்தியும் இழப்பீடு நல்கியும்