பக்கம்:நூறாசிரியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நூறாசிரியம்

களையும் , அவற்றின் உள்ளம் நிறைவுற வாயாத போக்கிற்கு இழித்து நினைப்போம் எனினும், தம் நிலையினின்று தாழ்ந்து போகாத அவை போன்ற முறையிலும், நாம் நமக்கமைந்த நம் உள்ளங்களைப் பேணிக்காத்தல் செய்யாது வாளா நிற்கின்றோம். மனம் மருள நேர்கின்ற துயரம் நிறைந்த சூழலில் பட்டும், ஒவ்வொரு நாளுக்கும் தினை அளவிலேனும் நம்மை நாம் உய்வித்துக் கொண்டோம் அல்லமே!

உங்கள் வாழ்க்கையெனும் உள்ளச் செலவிற்குக் குறியாவது எது? அக் குறியீட்டு அளவில் எவ்வளவில் தேர்ந்து விளங்கியது உங்கள் அறிவு? டோக்கிற்குத் தடுப்பு அற்ற இப் பரந்து அகன்ற வானத்தில் நோக்க மிலாது, மிகவும் கூரியதாகிய அம்பு ஒன்றினை எய்தி வீணாக்குதல் போல், உங்கள் வாழ்க்கை எவ்வகை ஊதியமுமின்றிக் கழிகின்றது. இவ்விடைப்பட்ட தேர்வாகிய வாழ்வு சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவினால் தேர்ந்து, இதன் பயன்கொண்டு உய்வீர்களாயின், இவ்வாழ்க்கைச் செலவு மிக அருமையுடையது ஆகும்.

விரிப்பு:

உலகத்தீரே என்றது இவ்வுலக உருண்டையில் வாழ்ந்து கொண்டிருக் கின்ற எல்லா மாற்ற இனங்களையும் விளித்துக் கூறியது. முன் பாட்டில் உலகம் உண்டு என்ற தேற்றக் கருத்தை அடியொட்டி உண்டாகிய அவ் உலகத்து நிற்கும் மாந்தரீரே என்று விளிக்கப் பெற்றது.இச்சொல் இருமுறை அடுக்கி வந்தது அண்மையும் சேய்மையும் நிற்போரை விளிப்பான் வேண்டியும், இக்கருத்திற்குச் செவிகொள்ளுமாறு அவரை வலியுறுத்த வேண்டியுமாம்.

அலகு அளவு; ஒரு வரையறை, ஓர் எல்லை.

பிறக்கம் - பிறப்பு. அம் ஈறுபெற்ற பெயர்ச்சொல்.பிறக்குதல்வெளிப்படுதல்

உள்ளம் - படிதலாகிய உணர்வு. இப் புடவியின்கண் நுண்ணிதாய் ஊடறுத்துப் பரந்து நிற்கும் உணர்வுப் பெருக்கத்துள், நம் கொள்திறனுக்கேற்பப் புலப்படுகின்ற ஒருபுடை உணர்வு படிகின்ற இடம். இவ்விடம் நாம் உழுது பண்படுத்தும் அளவிற்கேற்பப் பயன் தருவதாகிய மூளைச் சேற்றிற்கும், உயிர்ப்பு நிகழும் நெஞ்சாங்குலைக்கும் இடைப்பட்டு ஏறியிறங்கா நிற்கும் உணர்வு என்பர். மெய்ந்நூலார்.

சான்றல் - நிறைதல், மேம்பட்டு நிற்றல்.

வேட்டல் அழுந்தி விரும்பல். பிறப்பு-உருவிழந்து நின்ற புலம்பன் (ஆன்மா உருவேற்று வெளிப்படல். என்னை? கட்புலனுக்குப் புலப்படாது நிற்கும் உயிர்வளி (பிராணவாயு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/34&oldid=1221593" இலிருந்து மீள்விக்கப்பட்டது