பக்கம்:நூறாசிரியம்.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

நூறாசிரியம்

பாதுகாத்து வாழ்வித்தல், அன்றியும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் செயும் முயற்சிகளுக்கும் ஊக்கமளித்து உதவிபுரிதலுமாம்.

மக்களை இனிது வாழ்வித்தலே அரசின் மெய்யான வெற்றியா கலின் அதனான் வரும் மனமகிழ்ச்சி உவகை எனப்பட்டது.

முடிபணிந்து உய்யுங் குடி : குடிமக்கள் அரசுக்கு அடங்கி நடத்தலாவது அரசு வகுக்கும் அறச்சட்டங்கள் செயற்படவும், நலத் திட்டங்கள் நிறைவேறவும் அவற்றைக் கடைப்பிடித்தும் ஒத்துழைத்தும் வாழ்தல், உய்தல்-குற்றங் குறைகள் நீங்குதல். செய்தக்க அல்ல செய்தல் குற்றமும் செய்தக்க செய்யாமை குறையுமாம். முடிஅரசு

இனி, முடிபணிந்து உய்யுங் குடியாவது அரசும் பணிந்து உய்யுமாறு விளங்கும் தலைமை சான்ற குடிமக்கள் எனினுமாம்.

நிறையின் வாங்கிக் ... வணிகர் ': நிறையின் என்பது குறையின் என்பதற்கு மறுதலையாக நிற்றலின் அளவின் மீறி மிகுதிப் பொருள் கொடுத்தது.

பேராசையான் நடுநிலை பிறழ்ந்து பிறரை ஏமாற்றிப் பொருள் குவிக்கும் குற்றவாளிகள் ஆதலின் இழிநிலை வணிகர்கள் கறை நெஞ்சத்துக் கள்வர் எனப்பட்டனர். ஈண்டுச் சுட்டப் பெறும் வணிகர் நிலை,

கொள்வது உம் மிகைகொளாது

கொடுப்பது உம் குறைகொடாது

எனப் பட்டினப் பாலை குறிக்கும் வணிகர் நிலைக்குத் தலைமாறாதல் காண்க.

அஞ்சுடர் தவறினும் -குன்றிய : முறை பிறழாத இயக்கத்துக்குக் க்திரவனை எடுத்துக் காட்டாகக் கூறுதல் வழக்காதலின் ‘அஞ்சுடர்தவறினும்’ என்றார். இருள்நீக்கி அச்சந்தவிர்த்து எழுச்சியூட்டுதலின் கதிரவனை அஞ் சுடர் என்றார். செஞ்சொல் - நடுநிலையான தீர்ப்புரை.

கூத்தும் கலையும் தீத்திறம் பட்ட : நாடகக் கலை எல்லா நிலையினரையும் ஈர்க்கும் இயல்பு பற்றியும் - பாடல், உரையாடல், இசை, கூத்து, நடனம், ஒவியம், ஒப்பனை முதலான பல்வகைக் கலைகளையும் உள்ளடக்கி நிற்றல் பற்றியும் ‘கூத்துங் கலையும்’ என்ற விடத்துத் தனித்தெடுத்துச் சிறப்பித்து உரைக்கப்பட்டது.

கூத்து என்பது இசை தழுவிய ஆட்டத்தையும் நாட்டியம் என்பது இசைப்பாடல் தழுவிய மெய்ப்பாடு சான்ற நடனத்தையும் நாடகம் என்பது கதை தழுவிய நிகழ்ச்சியையும் சிறப்பாகக் குறிக்கும். குறிப்பினும்