பக்கம்:நூறாசிரியம்.pdf/341

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

315

ஈண்டுக் கூத்து என்பது மேற்காட்டியவாறு கலைகளினின்றும் தனித்து எடுத்துச் சிறப்பித்துரைக்கப்படுதலின் அது நாடகக்தையே குறித்தல் அறியப்படும். அன்றியும் அஃது இற்றை நிலையில் திரைப்படமாகவும் கொள்ளப்படும்.

பூத்து உயர் கற்பின் -பூண்டார் : கல்வி கேள்விகளினும் செல்வச் சிறப்பினும் எழில்நலங்கள் பிறவற்றினும் மேம்பட்டதாகவும் தெய்வத் தன்மையுடையதாகவும் போற்றப்படுதவின் கற்பு பூத்து உயர் கற்பு எனப்பட்டது. அஃது இளமகளிர்க்கே சிறப்புடைமை பற்றி கற்பின் மடவர் என்றார். மடவர்.இளமகளிர். அவர்தாமும் மனந்திரிந்து ஒப்பனையால் போலி முடியைப் புனைந்து கொள்ளும் நிலைக்கு இழிந்தனர் என்றார். புரைந்து - புரைபட்டு.

மகளிர் மனையாள், மனைவி, இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சிறப்பிக்கப்படுதலின் மனை முடிகழற்றி’ என்பதற்கு ‘மனைக்குரிய ஆளுமையைக் கைவிட்டு’ என்றாம். அவ்வாறன்றி ‘இயற்கையான முடியைக் கத்தரித்து விட்டு’ எனினுமாம். இவ்வாறே அழகு வேண்டி இயற்கையான பற்களைக் களைந்துவிட்டுப் பொய்ப்பல் கட்டிக் கொள்வாரும் பலர்.

வலியோர் வலிந்தார் மெலியோர் மெலிந்தார் : செல்வத்தானும் பிறவுடைமைகளானும் ஆளுமைநிலைகளானும் வலிமையுடையோரே தம் வலிவைப் பெருக்கிக் கொள்ளுதலும் அவற்றின் மெலிவுற்றோர் மேலும் மெலிவுறுதலும் வெளிப்படை

குலம் பலவாகிக் கலாம்பல விளைத்த- நிலத்தானும் தொழி லானும் இயற்கையைாய் ஒன்றி வாழ்ந்த மக்கட் குலங்கள் அயலவர் சூழ்ச்சியால் பிறப்பின் வந்தனவாகவும் உயர்வு தாழ்வு உடையனவாகவும் திரிக்கப்பட்டும் பல்வேறு சாதிகளாகப் பிரிக்கப்பட்டும் ஒவ்வொன்றினும் எண்ணற்ற உட்பிரிவுகள் விரிக்கப்பட்டும் தமக்குள் பகைத்து நின்று கலகம் விளைத்தல் கண்கூடு.

தந்துயர் பொறைந்து-ஏமும் இன்றே: தந்துயர் பொறைந்து உற்ற நோய் நோன்றல்’ என்றபடி தமக்குற்ற துன்பத்தைப் பொருட் படுத்தாமல் பொறுத்துக் கொண்டு. தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் என்றான் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி.

பொறைந்து- பொறுத்துக் கொண்டு. பொறை என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர் பொறைந்து என்று எச்சமாகி வினை வடிவு கொண்டது. கரைதல் அழைத்துச் சொல்லுதல்.

நல்லனவெல்லாம் கடனெனக் கொண்டு ஒல்லும் வகை யெல்லாம் உயர்பணி செய்யும் சான்றோர் பெருமக்களும் அரம்பர்களின்