பக்கம்:நூறாசிரியம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

நூறாசிரியம்

தாக்குதலுக்கு ஆளாக நேர்தலானும் தம் நற்பணிகளுக்கு உதவியும் துணையும் இன்றி அவற்றைக் கடைகொட்கச் செய்தற்கு இடர்படநேர்தலானும் சான்றோர்க்கு ஏமமும் இன்றே என்றார்.

புல்லென் உவகைக்கு ... இரங்குகை யானே : இழிநிலை மகிழ்ச்சியின் பொருட்டு மாந்தர்க்குச் சிறந்த மனக்கருத்தை விலைப் படுத்தலும், தீவினைகளைக் செய்யக் கூசாமையும் அறக்கொடினவாகலின் அவற்றைச் செய்வார்நிலை ஆசிரியரை வருத்துவதாயிற்று.

‘பொருளாட்சிபோற்றாதார்க் கில்லை’ என்றபடி வாழ்க்கைத் தேவையின் பொருட்டுப் பொருளும் போற்றத் தக்கதே யாயினும் அஃது ஒன்றனையே பெரிதெனப் போற்றித் தீவினைகளுக்கு இடமான அறியாமை இருளில் சிக்கி உழல்வோர் இரக்கத்துக்கு உரியராயினர்.

இரங்குகையானே சாய்தலும் இல்லேம் எனக் கூட்டுக !

இப்பாடல் பொதுவியல் திணையும், முதுமொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/342&oldid=1221194" இலிருந்து மீள்விக்கப்பட்டது