பக்கம்:நூறாசிரியம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

9

தீப்பொறியுட் பற்றி ஒளி வடிவாகிச் சுடர் என்று நின்றாற் போல, திண்மமும், தண்மமும், சூடும் இயக்கமும் ஒடுக்கமும் ஆகிய ஐம்பூத நிலைகளில் புலம்பன் படிப்படியாக இறங்குதல் செய்யும். இப் படிநிலைகளில் தனித்தனித் தங்குதலும், ஒன்றி வெளிப்பட்டுப் பிறப்புறுதலும், அறுதலும் நாம் விரும்பி நிகழுதல் அல்ல.

இறப்பு - பூதநிலைகளில் படிந்து நின்ற புலம்பன் அவற்றை விட்டுக் கடந்து ஆவி நிலையில் நிற்குந்தன்மை இறத்தல்- கடத்தல்-வெளிப்போதல்,

ஊங்கு - இவ்விடைப்பட்ட நிலையில்.

உவத்தல் - உள்ளம் களித்தல். எண்ணி மகிழ்தல்,

அழுங்கல் - மிகுவருந்தல்.

எள்ளல் - சிறிதாமென் றிகழ்தல்,

ஒம்பல் - பேணிக்காத்தல்

அலமரல் - துயரச் சுழற்சி.

வைகல் - நாள்தொறும்.

இப்பாட்டு, வாழ்வு அமைவினையும், அதற்கியைந்த பெருமையினையும், அப்பெருமையை நிலை நிறுத்தும் தன்மையினையும், அவ்வழி நில்லாத வாழ்வின் வெறிய போக்கினையும், அவ்வழி நின்ற வாழ்வின் அரிய நிலையினையும் கூறிநிற்கும், நேரிசை ஆசிரியப்பாவாம்

இது, பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.