பக்கம்:நூறாசிரியம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

நூறாசிரியம்

நாற்றத்தைக் குறிப்பினும் பண்டு நறுமணத்தையும் இரு மணத்தையுங் குறித்தமையின் தீ நாற்றம் என்று அடைமொழி புணர்த்துக் கூறினார்.

இன்வளி-நல்ல காற்று; பரத்தல் -பரவுதல்

விழும் துளி நச்சம் விரிபுனல் கலத்தலும் - விழுகின்ற துளியளவு நஞ்சு பரந்த நீரில் எங்கும் கலத்தலும்.

ஆவியின் இயல்பு மேல்நோக்கி எழும்புதலும், நீர்மத்தின் இயல்பு கீழ்நோக்கி இழிதலுமாதலின் மேலையடியில் எழும் என்றவர் ஈண்டு விழும் என்றார்.

துளி - நீர்மத்தின் சிற்றளவு : மழைத் துளியளவு

நச்சம் . நஞ்சு விரிபுனல் - பரந்துபட்ட நீர்

அதிரொலி மென்செவிக்கு அழல் எனப்படர்தலும் - இடி முழக்கம் மெல்லிய செவியின்கண் தீப்போலப் பரவுதலும்.

அதிர்தல்-முழங்குதல்.ஒலி-இடி அதிரொலி என்றது இடி முழக்கத்தை

மெல்லிய ஒலியையுங் கதுவுமாறு செவிப்பறை மென்மையானதாக இருத்தலின் மென்செவி என்றார் செவிக்கு - செவியின்கண்

விரைந்து பரவுதலுக்குத் தீ உவமையாக கூறப்பட்டது. அழல்-தீ; எனஉவம உருபு.

கதிர்ஒளி விரிந்து உயிர் கனத்தலும் - கதிரவனின் ஒளி யாண்டும் பரவி உயிரினங்களுக்கு வெப்பமளித்தலும்.

கதிர்- கதிரவன் கனத்தல்-கனற்றுதல்; வெப்பமூட்டுதல்.

உண்மையின் உலக இயல்பாய் இருத்தலால்,

முன்னிய கோட்டம்- மின்னுவது ஆகலின் ஒருவர் மனத்துப்பட்ட கோணல் நிலைபெற்ற உயிர்கள் அனைத்திடத்தும் பளிச்சிடுவது ஆதலின்.

முன்னுதல்-கருதுதல்; மனத்தின் வினை. கோட்டம்-கோணல் ஒழுங்கின்மை; உடல்கள் அழிவன வல்லது உயிர்கள் அழிவற்றன என்னுங் கருத்தால் மன்னுயிர் என்றார். மன்னுயிர் நிலை பெற்ற உயிர் மின்னல் வீச்சுப்போல் கருத்துகள் தோன்றுதலின் மின்னுவது என்றார். மின்னுவது - பளிச்சிடுவது.

ஒருவர் கருதும் கருத்து மாந்தர் அனைவர்தம் உள்ளத்திலும் தோன்றுகிறது எனப்படுதலின், தம் உள்ளத்துத் தோன்றுங் கருத்து இன்னொருவரது கருத்தின் தாக்கமாகவும் இருக்கக்கூடும் என்பார் இவ்வாறு கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/350&oldid=1221209" இலிருந்து மீள்விக்கப்பட்டது