பக்கம்:நூறாசிரியம்.pdf/351

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

325


உன்னுவது எவையும் தம்மிய என்னா- தம் மனத்துத் தோன்றும் கருத்துகள் அனைத்தும் தாமே கருதியன என்று கொள்ளற்க,

உன்னுவது கருதுவது கருதப்படும் கருத்துகள். தம்மிய-தம்முடையன. தாமே கருதியன என்னா-என்று கொள்ளற்க

தமக்கும் எம் இயலோர்க்கும்-நினைம் தமக்கும் மற்றும் எத்திறத்தார்க்கும் நன்மை விளையுமாறு நினைக.

எம் இயலார்க்கும் எவ் இயலார்க்கும். அம்மை-அவ்வை, செம்மை-செவ்வை முதலானவற்றுள் மகரம் வகரமிகத் திரிந்தாங்கு ஈண்டு வகரம் மகரமாகத் திரிந்தெனக் கொள்க.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண் மொழிக்காஞ்சி என்னுந் துறையுமாம்.