பக்கம்:நூறாசிரியம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

நூறாசிரியம்


படுதுயர்-மிக்க துன்பம்

முடை -தீய நாற்றம்

பதுக்கல் திருவார் அழிம் என்று அழுங்கார்

யாருக்கும் பயன்படாமல் பதுக்கிவைத்திருக்கும் செல்வத்தையுடையாரது குடும்பம் மிக்க துன்பமுற்றவிடத்து அழிந்து விடும் என்று ஊரார் வருந்தார்; அழிய விடுவர்.

பதுக்கல் என்றமையால் பிறர் அறியாதவாறு கரந்து வைத்திருத்தலும், அது முறையான வழியில் ஈட்டப்படாமையும் கொள்ளப்படும்.

செல்வமிருந்தும் அவர் துன்புறுதல் அஃது அல்வழியில் ஈட்டப் பட்டமையான் எனக் கொள்க!

அழிம்-அழியும் எனற்பாலது செய்யுள் நோக்கித் தொக்கு நின்றது. செய்யும் என்னும் வாய்பாட்டு வினையாதலின் குடும்பம் என்பது வருவித் துரைக்கப்பட்டது. அல்லாக்கால் திருவார் அழியும் என்பது பொருந்தாமை (தொல்.சொல்) அறிக!

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

என்றாங்கு ஈண்டுக் குடும்பத்தின் அழிவு சுட்டப்பட்டது. பதுக்கலுக்கு உடந்தையாய் இருந்தமையின் என்க:

இழிவு அறிந்து இறைத்து உணவு ஈந்து உய்க: பதுக்கி வைத்தலால் படும் இழிவினை அறிந்து செல்வத்தை எல்லோர்க்கும் வழங்கியும் உணவு அளித்தும் உய்வுபெறுக,

இறைத்து எல்லோர்க்கும் வாரி வழங்கி இவ்வாறு பொதுப்படக் கூறியவர் உணவு ஈந்து என்று தனித்துதெடுத்துக் கூறியது அதன் சிறப்பு நோக்கி என்க.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் கொடுப்போ ரேத்திக் கொடாப் பழித்தல் என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/354&oldid=1221220" இலிருந்து மீள்விக்கப்பட்டது