பக்கம்:நூறாசிரியம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

333


76 வியப்பினும் வியப்பே


சென்றுநொந் தார்வழிச் செல்கிலர் இலரே
சென்றுய வென்றார் செவிகொள் ளலரே
கண்டுழித் தேர்ந்துங் கைப்பற் றலரே
தண்டிலா விழியிலி தவிப்பென உண்டலுக்
கொருதுறை யின்றிப் பொய்யுரை குயிற்றிக் 5
கரவுகைக் கொண்டே உறவு தழீஇ
ஓடுநீ ருருட்ட உருசிறுத் தழியும்
பீடுறு பெருங்கல் போலப் பிழையிலாது
உளமும் பேணலர்; உடலும் பேணலர்;
வளமுந் துறுத்தும் வாழ்வது மின்றி 10
எழுந்தலைத் தயின்றே திலராய்
விழுந்துயிர்ப் படங்கல் வியப்பினும் வியப்பே!


பொழிப்பு:

முன்னர்த் துன்புற்றவர்கள் சென்ற வழியில் செல்லாதவர்கள் இலர்; இந்நெறியைக் கடைப்பிடித்தொழுகி ஈடேறுக என்ற சான்றோர்தம் அறிவுரையைக் கேட்டு நடந்தாரல்லர், தாமே கண்டு நல்லதெனத் தெளிந்தகாலையும் அதனைக் கடைப்பிடித்து ஒழுகினாரல்லர்; ஊன்றுகோல் இல்லாத குருடன் செல்வழி யறியாது தவிப்பது போல உணவின் பொருட்டு ஒரு முறையுமின்றிப் பொய்யைப் புனைந்துரைத்தும் வஞ்சகக் செயல்களைக் கைக் கொண்டும் உறவாடி, ஓடுகின்ற யாற்றுநீரால் உருட்டிச் செல்லப் பெற்று வடிவம் சிறிதாகி அழிகின்ற, உயர்ந்து நின்ற பெரிய கல்லைப் போல; பிழையின்றி உள்ளத்தையும் உடலையும் போற்றிக் கொள்ளாதவராய், செல்வத்தைத் திரட்டி வைத்திருந்தும் அமைதியுற வாழாதவராய் எழுச்சிகொண்டு அலைந்தும் உண்டும் ஏதுமற்றவராய்ச் செயலிழந்து கிடந்து உயிரை விடுவது வியப்பான வற்றுளெல்லாம் வியப்பாம்!

விரிப்பு:

இப் பாட்டு புறப்பொருள் சார்ந்தது.

துன்பத்திற் கிடனான வழி என்று அறிந்து தவிர்க்காமலும், சான்றோர் கூற்றைக் கேட்டு நடவாமலும், தாமே கண்டு தெளிந்த நெறியையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/359&oldid=1209178" இலிருந்து மீள்விக்கப்பட்டது