பக்கம்:நூறாசிரியம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

நூறாசிரியம்

கடைப்பிடிக்காமலும் தவிக்கின்ற மக்கள், உணவின் பொருட்டு முறையேதுமின்றிப் பொய்யுரையும் வஞ்சக நடத்தையுங் கொண்டு உறவாடித் தம் உள்ளத்தையும் உடலையும் நெறிதவறாது போற்றிக் காவாமலும் செல்வத்தைத் திரட்டி வைத்திருந்தும் சிறப்புற வாழாமலும் முனைப்புற்று அலைந்து உண்டு ஏதுமில்லாதவராய்க் கிடந்து உயிர்விடுதல் கண்டு வியப்புற்றுப் பாடியது இப் பாட்டு.

சென்று நொந்தார்.இலரே - முன்னர்ச் சென்று துன்புற்றவர்கள் கடைப்பிடித்த வழி துன்பத்திற்கு இடனானது என்று அறிந்தும் அவ்வழியே யாரும் செல்லாமல் இல்லை.

அறிந்தும் செல்லுதலின் முரண்பாடு தோன்ற, அவ்வழியிற் செல்வாரும் உளர் என்பதனைச் செல்கிலர் இலர் என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினார்.

சென்று உய என்றார் செவி கொள்ளலரே- இவ்வழியைக் கடைப்பிடித்து ஈடேறுக என்ற சான்றோர்தம் அறிவுரையையும் கேட்கின்றார் இலர்.

உய்க என்றார்-சான்றோர் செவிகொள்ளற் பாலனவாதலின் அறிவுரை என்பது பெறப்படும்.

கேட்கின்றார் இலர் என்பது கேட்டுச் செயற்படவில்லை என்னும் பொருட்டு.

கண்டுழித் தேர்ந்தும் கைப்பற்றலரே- தாமே கண்டு தெளிந்த காலையும் அந்நெறியில் நடக்கின்றார் இலர்.

மேற்கூறியாங்குப் பார்த்துங் கேட்டும் அறிந்த வழியில் நடவாதது மட்டுமின்றித் தம் பட்டறிவாற் கண்டு தெளிந்த வழியிலும் நடவாதது வியப்புக்குரியதாயிற்று.

தண்டிலா விழியிலி தவிப்பு என- ஊன்று கோல் இல்லாத குருடன் செல்வழி யறியாமல் தவிப்பது போல,

தண்டு- ஊன்றுகோல்

சான்றோர் கூற்றைக் கேளாமையின் ஊன்று கோல் இன்மையும், தன்வழியிற் செல்லாமையின் விழியின்மையும் கூறப்பட்டன.

என உவமஉருபு.

உண்டலுக்கு ஒரு துறை.உறவு தழீஇ: உணவு உண்டலின் பொருட்டு வரம்பின்றிப் பொய்யைப் புனைந்துரைத்தும் வஞ்சக நடத்தையை மேற்கொண்டும் உறவாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/360&oldid=1209179" இலிருந்து மீள்விக்கப்பட்டது