பக்கம்:நூறாசிரியம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

339


கையற்று-செயலறவுபட்டு.

கை -செயல்.

துணை கோரினும் - துணைவராயினார் தம் நிலையில் நெகிழ்ச்சி யுற்றாலும.

மெய்யே நின்ற மேலோ-மெய்ந் நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுதலில் உறைத்து நின்ற சான்றோர் பெருமக்கள்.

பொய்யும் நினையார்புரையார்யாண்டே-யாண்டும் பொய்யை நினைக்கவும் மாட்டார்; போலியாக நடக்கவும் மாட்டார். யாண்டும் எக்காலத்தும், எவ்விடத்தும் பொய்மையை நினையார் என்றமையாற் மனத்துய்மை சுட்டப் பெற்றது. மனத்தாலும் நினையார் ஆகலின் நாவால் பேசார் என்பது தானே போதரும்.

புரை உள்ளீடின்மை - புரையார் என்றமையின் போலியான பொருளற்ற செயலைச் செய்யார் என்றவாறாயிற்று.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

இது வஞ்சித்தளை பொதுளிய நேரிசை ஆசிரியப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/365&oldid=1209184" இலிருந்து மீள்விக்கப்பட்டது