பக்கம்:நூறாசிரியம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

355


ஏகத் தகாத சேர்க்கையை ஏகாச் சேர்க்கை என்றார். பெரும்பாலும் கள், சூது, வரைவின் மகளிர் தொடர்பெல்லாம் நண்பர்களாலேயே வருதலின் அவன் கெடுதலுக்குக் கரணியமான கூடா நட்பை ஈண்டுக் குறித்தார்.

தளிமகள் நுகர்ந்து -விலைமாதினிடத்தில் இன்பந் துய்த்து.

கோயிலில் தொண்டு செய்யப் புகுந்து நடனமாடத் தொடங்கி தேவரடியாரானோர் விலைமாதராய் இழிந்தாற்போலக் கோயிற்பெண்டிர் எனப்பொருள்படும் தனிமகளிரும் விலைமாதராயினர். தளி கோயில்.

களி மிக மண்டி - மயக்கம் மிகுமாறு கள்ளை அதிகமாகக் குடித்து.

களி - கள்ளுண்ட மயக்கம்.

மிக - மிகுமாறு. - மண்டி நிரம்பக் குடித்து.

வெளியில் துயில்படுக்கும் - தெருவில் உறங்குகின்ற

விழலை - விழல் போலும் புல்லனை.

விழல் - உள்ளீடற்ற பயிர் புல் வகைகளுள் ஒன்று பயன்பாடற்றது. ‘விழலுக்கு இறைத்த நீர் என்பது பழமொழி.

பேறு என' - மகவு என-பிள்ளை என்று.

முனை ஈன்றனமே தோழி - முன்னாளில் ஈன்றோமே, தோழி! தன் கணவனையும் உள்ளடக்கி ஈன்றனமே என்று தோழியிடம் வருந்திக் கூறினாள்.

இது வாகை என்னும் புறத்தினையும் மூதின்முல்லை என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/381&oldid=1209398" இலிருந்து மீள்விக்கப்பட்டது