உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

நூறாசிரியம்

தலைவராக அமர்த்தப்பட்டமையும், காமராசரிடத்தே பயிற்சி பெற்ற சி.சுப்பிரமணியம், இரா. வெங்கட்டராமன் முதலானோர் நடுவணரசில் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப் பெற்றமையும் பிறவும் எடுத்துக் காட்டுகளாம்.

எண்ணமும் பேச்சும்...... ஒருபேருவமை - எண்ணமும் பேச்சும் செயலொடு பொருந்திய உண்மையான மாந்தனுக்கு ஒரு தனி உவமையாம்.

எண்ணிய பேசாமையும் பேசியதைச் செயற்படுத்தாமையுமே பெரும்பாலும் மக்களின் இயல்பாகக் காணக்கிடத்தலின் அவ்வாறன்றி எண்ணத்தையும் சொல்லையும் செயல்படுத்திக் காட்டியவன் என்றலின் உண்மை மாந்தனுக்கு ஒரு பேருவமை என்றவாறு.

தாழ்ச்சி நிலைக்குத் தனைத்தாழ்த்தாத காழ்ச்செயல் மறவன்- தன் தகுதிக்குக் குறைவான செயல்களில் ஈடுபட்டுத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத உறுதியான செயல் திறம் வாய்ந்த மாவீரன்,

காழ்ச்செயல்- உறுதியான செயல்.

கருமவீரன் - தனக்கென பயன் கருதாது செயல்படுதலின் கருமவீரன்.

உலகம் வியக்க ...... கொள்கை நெடியவன் - உலகமக்கள் வியப்புறுமாறு அரசியல் என்னும் வானத்தின்கண் நீண்ட காலமாக நிலவிய நேர்மைக் கொள்கைச் சிறப்பால் உயர்ந்தோன்.

செல்வரை ஏவி ஏழையர்க்கு ஆக்கிய- பெருஞ் செல்வர்களை ஏவி விட்டு ஏழை மக்களின் துயர்துடைக்கும் முன்னேற்றப் பணிகளுக்கும் உதவுமாறு ஆற்றுப்படுத்திய,

சொல்வரையிட்ட - சொற்களை அளவாகப் பயன்படுத்திப் சுருக்கமாகப் பேசிய,

சோர்விலா வினைஞன் - தோல்விகளைத் தழுவ நேர்ந்த போதும் சோர்வடையாது செயல்பட்ட வினையாளன்.

புகழ்உரை விரும்பாப் பொறுமையின் குன்றம் - யாரும் தன்னைப் புகழ்ந்து பேசுதலை விரும்பாத பொறுமையின் குன்றம் போன்றவன்.

இகழ்உரை இல்லா ஆட்சியின் ஏந்தல் - யாராலும் பழிக்கப்படாத ஆட்சியை நடத்திய தலைவன்.

நல்அரசாட்சிக்கு.... துறவி- மக்கள் முன்னேற்றங்கருதும் நல்லஅரசாட்சி யின்கண் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இல்லறத்தை மேற்கொள்ளாதே துறந்த நல்ல அறநெறியில் நடக்குத் துறவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/388&oldid=1209669" இலிருந்து மீள்விக்கப்பட்டது