பக்கம்:நூறாசிரியம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

நூறாசிரியம்

காட்டகத்தே, குறி பிழையாமல் எய்யும் கூரிய வேலானது உயிரை உண்ண, அடியற்று வீழும், அறியாமல் அங்கு வந்த மாந்தர் தம் சூடான குருதியை உறிஞ்சி, அவரைச் சூழ்ந்து அவர் உடலை உண்ணும் கொடும் பண்பு சான்ற இனத்தானும், தம் தம் பிறப்பும் நாடும் பழக்க வழக்கங்களும் கடந்து தமக்குள்ளே ஒருவரை யொருவர் ‘எம் பிறப்பு என்று கூறிக் கொள்ளும் அந்த இனிய நல்ல நாள் நெடுந்தொலைவில் இல்லையாக, மிகவும் குறுகிய கால எல்லைக்குள் வருவதே

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்ற, நாட்டாலும் இனத்தாலும் நாகரிக நிலைகளாலும் வேறுபட்ட பற்பல மக்கள் பிரிவினரும் தம் வேற்றுமைகளை யெல்லாம் கடந்து உடன்பிறப்பு உணர்வோடு உறவாடும் நாள் மிக நீண்ட தொலைவில் இல்லை; மிக அண்மையிலேயே உள்ளது என்று கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

இதனால் ஆசிரியரின் பரந்த மனப்பான்மையும் எதிர்கால நோக்கும் பிறவும் புலப்ப்டக் காணலாம்.

உடுநீர் ஆடை இவ்வுலகம் - உடுத்துள்ள நீராகிய ஆடை தழுவிய இவ்வுலகம்,

நிலம் ஆடையணிந் திருப்பதாகக் கூறுவது அதனைப் பெண்ணாக கற்பனை செய்யும் மரபுபற்றி யென்க!

ஒன்று என- ஒன்று என்னுங் கொள்கையுடையவராகி

பனிக்கல் மிதவைப்பாடு அகழ்ந்து உண்ணும்-உட்புறத்துக் காண்டலாகிய உணவுச் செல்வங்களுக்காக மிதக்கின்ற பனிக்கட்டியை உடைத்து, உண்டு வாழும் பண்பினராகிய,

பனிக்கட்டியை உடைத்து அதனுள்ளிருக்கும் உயிரிகளை உணவாகக் கொள்வோர் என்றவாறு மிதவைப்பாடு மிதவைப்பட்டது; மிதப்பது.

நனிக்குறள் ஒருவனும் - குட்டையான மாந்தர் இனத்தானும்

இவ்வாறு குறிப்பிடப் பெறுவோர் எக்கிமோக்கள் என்க.

குறள் குறுகிய வடிவத்தையுடைய

மணல்பரவை நடுந்து-மணற் கடலாகிய பாலைப்பரப்பின் நடுப்புறத்தே அதனை நீந்திக் கடக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/410&oldid=1211233" இலிருந்து மீள்விக்கப்பட்டது