பக்கம்:நூறாசிரியம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

389


பொன்றுவ பொன்றுவ பொன்றில பொன்றா - அழியத்தக்கன அழியும்; அழியத் தகாதன அழியா!

உள்ளது சிறத்தல் என்னும் கூர்தலறக் கோட்பாட்டை இவ்வாறு விளக்கினார்.

குன்றலும் வேறலும் கொள்ளுநர் தகவே - தோல்வியுறுவதும் வெற்றி பெறுவதும் அவற்றைக் கொள்வோர் தகுதியினாலேயே,

தோல்வியுறுவார் மனங்குன்றுதல் இயல்பாதலின் தோல்வியைக் குன்றல் என்றார். இது வெற்றியைக் குறிக்கும் கெலித்தல் என்பதன் மறுதலையில் வைத்து உணரப்படும்.

தகவே என்றமையான், தகவின்மையின் தோல்வியும் தகவுண்மையின் வெற்றியும் என்க!

வெற்றி தோல்வி என்றும் வழக்கிற்கு மாறாகத் தோல்வியை முற்கூறியது என்னை யெனின், மேல் பொன்றுவ, பொன்றில என வைத்த நிரல் நோக்கி யென்க!

வெல்தல் வேறல் எனப் புணர்ந்து நின்றது. வேறல் - வெற்றி.

ஒன்றுவது ஒன்றாது ஒழியினும் - ஒருவர்க்கு வந்துறத் தக்கது வந்துறாது தவிரினும்

ஒன்றுவது பொருந்துவது வந்துறத்தக்கது. ஒன்றாது வந்துறாது. ஒழியினும் தவிரினும்

இறப்பினும் என்றும் சிறப்பு உண்டே - அந்நிலையிலேயே அவர் இறக்க நேரினும் எக்காலத்தும் அவர்க்குரிய சிறப்பு உண்டு.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/415&oldid=1211246" இலிருந்து மீள்விக்கப்பட்டது