பக்கம்:நூறாசிரியம்.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

391

சென்று வழியிடை நலஞ்சிதைத்தது போல நலங்கெடுத்தவன் என்று அப்பெண் வாயிலாகக் கூறப்பெறும் உவமையின் மூலம் மேற்கூறியாங்கு அவள் நலஞ்சிதைக்கப்பட்ட செய்தி புலப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்புகோயானே பொன்றுகோயானே-யான் தனித்திருந்து அழுவேனோ அன்றியான் இறந்தொழிவேனோ,

புலம்புதல் தனித்திருத்தல்; தனித்திருந்து அழுதல் புலம்பே தனிமை. பொன்றுதல் இறத்தல்,

நெருநல் வெண்முகை இன்று அவிழ்ம் - நேற்றைய வெண்ணிறப் போது இன்று மலரும்.

நெருநல்-நேற்று. முகை போது, அவிழ்ம்- அவிழும் ஊங்குப் பெரும் கள் படுஉம் - அதன் பால் மிகுந்த தேன் பொருந்தியிருக்கும்.

கள்-தேன். படுஉம்-படும்; பொருந்தியிருக்கும். வண்டினது எதிர்பார்ப்பின் மிகுதியைக் காட்டி நின்றது.

தூம்புநிறை உண்ம் எனக்கருதி - தும்பிக்கையால் உறிஞ்சி நிறைய உண்ணுதும் எனக் கருதி. -

தூம்பு துளைக்கை, வண்டின் தும்பிக்கை.

பொறிகுதியிறு கயந்தலைப்படுமுன்-புள்ளிகளையுடைய வண்டு நீர்மடுவை நண்ணும் முன்னரே.

பொறி-புள்ளி. ஞிமிறு-வண்டு, கயம்-நீர்நிலை. தலைப்படுதல் வந்து சேருதல்.

நீர்வேட்டு நண்ணிய வயக்களிறு - நீர் உண்ணுதலை விரும்பி அங்குவந்த வலிமை சான்ற ஆண்யானை.

வேட்டு விரும்பி. நண்ணிய வந்து சேர்ந்த வயம்-வலிமை. களிறு ஆண்யானை,

வாங்கிக் கூர்ங்கோட்டு ஏந்தி - வளைத்துப் பற்றித் தன்கூரிய கொம்பிலே ஏந்திச் சென்று. கோடு- கொம்பு.

வழிஇடைஊழ்க்கும் - வழியிடையே செவ்வியழிக்கப்பட்ட ஊழ்த்தல் செவ்வியழிக்கப்படுதல்.

பொலங்கிளர்தாமரைப் புதுமலர்புரைய - எழில் விளங்கும் தாமரையாகிய நாண் மலர்போல.

பொலம் அழகு கிளர்தல்-விளங்குதல் நாள்மலர் அன்றலர்ந்த மலர்; புதுமலர். புரைய-போல.