பக்கம்:நூறாசிரியம்.pdf/422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

நூறாசிரியம்


'96 ஆரிட ஆரும்'


உவர்துளி குறையினும் உறைப்புறை மிகினும்
ஆநெய் நாறும் நறுங்குழை அடினும்
தவிர்தல் செய்தே, இகுளை கவடின்றி
விழிதுவர்ப் பேறக் கடிமே! மொழியின்றி
அமைவேமைப் பின்னணைந்து தொங்குமுக மேந்தி 5
இமைபடரக் காந்தி இதழ்முத்திப் பிழைநோகும்
எம்ஐ தஞ்சுவை கூர எதிரிருந்தே
உய்வுனாப் பொதுள ஆரிட ஆரும
துய்தினை வயிலுங் கலைபயி லிடத்தே!


பொழிப்பு:

தோழி உணவின்கட் சிறிதே உப்புக் குறையினும், அன்றிக் கார்ப்புச் சற்றே மிகுந்திருப்பினும், ஆவின் நெய் நாறும்படி பொங்கல் சமைப்பினும் அவற்றை உண்ணாது விலக்கி, வஞ்சகமில்லாமல் சினந்து பேசுவார். மறுமொழி பேசாது அமைதியாய் இருக்கும் எம்மைப் பின்பு தழுவி; கவிழ்ந்த எம் முகத்தை நிமிர்த்தி, இமைகள் வருடுமாறு தன்முகத்தைப் பொருத்தி, வாயிதழில் முத்தி, தன் பிழைக்காக வருந்துகின்ற எம் தலைவர் தாம் விரும்பியுண்ணும் சுவை மிகுமாறு எதிரிலிருந்து உண்பிக்கும் உணவை நெருங்கியிருந்து ஆர் படைக்க உண்ணுவார்; முன்னர் நுகர்ந்த நினைவை மனங் கொண்டு கலைகள் பயிலும் இடத்தில்!

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் மேற்படிப்பின் பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து வேற்றுார்க்குச் சென்றிருந்தானாக, அவன் கூடியிருந்த காலத்து, நிகழ்ந்த உணவுத் தொடர்பான நிகழ்ச்சிகளை நின்ைவுகூர்ந்து, கலைபயிலிடத்தே அவர் சுவை மிகு உண்டியை அருகிருந்து ஆர் படைக்க உண்பார் என்று தலைமகள் தோழியிடத்தே வருந்திக் கூறுவதாக அமைந்தது இப் பாட்டு,

உவர் துளி குறையினும் - உணர்வின்கண் உப்பு சிறிதே குறையுமாயினும்

உவர்உப்பு துளி- சிறிதளவு.