பக்கம்:நூறாசிரியம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

நூறாசிரியம்


இதழ்முத்தி - வாயிதழில் முத்தமிட்டு.

பிழைநோகும் எம்ஐ - தாம் கடிந்து பேசிய பிழைக்கு வருந்துகின்ற எம் தலைவன்.

தம் சுவை கூர எதிர் இருந்தே உய் உனா - தாம் விரும்பியுண்ணும் சுவை மிகுமாறு எதிரில் இருந்து யாம் உண்பிக்கும் உணவை.

தான் உண்பித்த உணவை நினைவுகூர்ந்தாளேனும் அவ்வுணவு ஈண்டு உணவு என்னும் அளவிலேயே நின்றது.

கூர்-மிக.

உய் உண - உண்பிக்கும் உணவு உய் செலுத்து.

பொதுளஆர் இட ஆரும் - ஆர் நெருங்கியிருந்து படைக்க உண்டார். அவன் உண்டி குறித்து வினவினளேனும் அங்கே ஒரு பெண்ணிருந்து படைத்தலுங்கூடுமோ என்னும் எண்ணம் அவள் மனத்தை அருவுதலும் அறிப்படும். பொதுள - நெருக்கமாக

துய் நினைவு அயிலும் கலை பயில் இடத்தே - முன்பு நுகர்ந்ததனைப் பற்றிய நினைவை மனங்கொள்ளும், கலைபயில் கழகத்தே

தன்னைப் போலவே அவனும் பண்டு நுகர்ந்ததனை நினைவுகூர்வான் என்னும் எண்ணத்தால் இவ்வாறு கூறினாள்.

இப்பாடல் முல்லை என்னும் அகத்திணையும், ஒதற்பிரிவுற்ற தலைமகனை நினைவுகூர்ந்து கிழத்தி தோழிக் குரைத்தது என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/424&oldid=1211293" இலிருந்து மீள்விக்கப்பட்டது