பக்கம்:நூறாசிரியம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

403

ஈரச் சீரை இழிஸ்ரீ ரோடும் 30
மீளக் கொணர்ந்த தீக்கனா வொன்றே!
பின்றையோர் யாமத்து முந்தை மாண்ட
துவெண் கூறையோடு ஐயாய் விளங்கி
வாவென் குறிப்பின் இருவருந் தொடரப்
புறவூர் மருங்கிற் றமியனை நிறுத்தி 35
எமக்கை வலத்தோ ளிட்டுவா னேறிய
அமையாக் கனவோ அம்ம விரண்டே!
ஈங்கிவை நிறைமதி இரண்டி னெதிர்ந்த
யாங்கினி யமைவந் தாங்கிய நாளே!
சாக்குறி காட்டிய யாக்கை உள்ளொளி 40
மீக்குறி காட்டிக் கூட்டல் மெய்யென
ஒன்றிய நினைவின் யாமே என்றுந்
துயிலுவம் எதிர்கவின் கனவே!


பொழிப்பு:

மடவை மீனின் உடல் நடுவிருக்கும் முள்போலும் சிறிய சடையின்கண் செறிவுறப் பூவைச் சூடிக்கொண்டவளாய் ஆடிக்காட்டும் இளஞ்சிறுமியின் புன்முறுவலையுங் கண்டேம்; அவள் அப் பருவங் கடந்து தனக்குப் பற்றாத சீலையை உடுத்திக் கொண்ட நிலையையுங் கண்டேம், மொய்க்கின்ற விழிகளையுடைய அவள் நடனமாடும் விரல்களால் பூக்களைத் தலைமாறிச் சேர்த்து முற்றத்திலிருந்து தொடுத்த முல்லைமாலையைக் கண்ணாடிக்கு முன்னர் நின்று அணிந்துகொண்டு பாடிய பாட்டையுஞ் செவிமடுத்தேம், பிளக்கப்பட்ட மாவடு போன்ற விழியையுடைய அவள் மகப்பேற்றை விரும்பிய கணவனுக்கு மனைவியாகப் புகுந்து மாட்சிமிக்க கற்பியல் வாழ்க்கையின் புதுமையான இல்லற இன்பந்துய்ப்ப, அவன்றன் பெற்றோர் ஈன்றாங்கு ஆண்மகவு இரண்டும் பெண் மகவு ஒன்றுமாகத் தான் இனிது ஈன்ற பெருமையையுங் கண்டேம்.

பேரிளம்பெண்ஆகிய அவள் வந்ததும் சென்றதும் நேற்று நிகழ்ந்தன போலுள்ளன; அம்ம! நிழல்போலும் அவடள் உருவமும் எம் உள்ளத்திலேயே உள்ளது. உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பவள் போலவே எம் உள்ளத்தில் இருக்கின்றாள்.

எம்முடனேயே தானுங் கல்வி பயின்றாள்; எம்முடனேயே கண்ணுறங்கினாள் யாம் விம்மி அழுதக்கால் எம் பொருட்டுத் தானும் அழுதாள் யாம் மகிழின் அதுகண்டு அவளே பெரிதும் மகிழ்வாள்; தம்பசியை அடக்கிக் கொண்டு எமக்கு உணவூட்டும் அன்னையாரைப் போலத் தானும் எம்மை உண்பிப்பாள் அவள் எம் அக்கையல்லிள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/429&oldid=1211311" இலிருந்து மீள்விக்கப்பட்டது