பக்கம்:நூறாசிரியம்.pdf/430

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

நூறாசிரியம்


எம் வருகையை எதிர்பார்த்திருந்து தன் பிள்ளைகளை ஆர்வமுறச் செய்து, கூந்தலின்கண், இரவே கட்டிவைத்த மொட்டுகள் மலர்ந்து மனங்கமழ எம்மையும் எம் துணைவியையும் வரவேற்றுக் குழந்தைகளைத் தூக்கி அணைத்துக் கொண்டு எம்மை நிறைவுறப் பேணிய தமக்கை அவள்!

எப்போது இங்கே வருவாள் இறந்துபட்ட அக்கை மீண்டும் வருவாளோ! எம்மைப் போற்றுவாள் கொல்:

முன்னரே அவள் இறப்புப் பற்றிய குறிப்பொன்று உண்டு.

வீட்டின் முற்றத்தை யடுத்த நீர் வற்றாத கிணற்றின் உயர்ந்த கரையின்கண் அழுகின்ற எம் அன்னையின் முகத்தினின்றும் திரண்ட கண்ணிர் வழிய, வெளியே சென்றவளைக் காணாது அவர் வருந்தி நாக்குழற; வலிமை வாய்ந்தான் ஒருவன் விரைந்து அந் நீர்க்குட்டத்துட் பாய்ந்து நனைந்த சீலையோடும் ஒழுகும் நீரோடும் அவளை மீட்டுக் கொண்டு வந்த தீய கனவு ஒன்று.

பின்னையொரு நள்ளிரவில், முன்னை இறந்துபோன தூய்மையான வெள்ளைச் சீலையையுடுத்திய எம் பாட்டியார் தோன்றி எம்மை நோக்கி வாஎன்று குறிப்பு காட்டயாங்கள் இருவேறாம் அவரைத் தொடர்ந்தனமாக, ஊரின் புறம்பான பகுதியில் எம்மைத் தனியனாக நிறுத்தி எம் அக்கையைத் தம் வலப்புறத் தோளில் தூக்கிக் கொண்டு வானத்தின்கண் எழும்பிச் சென்ற, எம் மனத்தை உறுத்திய இரண்டாவதான கனவு மற்றொன்று அம்ம!

இவ்விரு கனவுகளும் இரண்டு மாதங்களில் நனவாய் நிகழ்ந்தன. அக்கொடுமையைச் சுமந்த நாளின் நினைவை இப்போது எங்ஙனம் பொறுத்துக்கொள்வேம் சாவு பற்றிய அறிகுறி காட்டிய எம் உடலின்கண் பொருந்திய உள்ளொளி மேலை நிகழ்ச்சிகளையுண்ரும் அறிகுறி காட்டி எம்மை இறைமையில் பொருத்துதல் உண்மையில் நிகழும் என ஒருமையுற்ற நினைவோடும் யாம் நாளும் துயிலுகின்றேம். இனிய கனவு வாய்ப்பதாக!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

பாவலரேறு அவர்களுடைய பெற்றோர் தம் முதன்மகவாகவும் மூத்த மகளாகவும் பிறந்து இளஞ்சிறுமியாகவும் படிப்படியே வளர்ந்த நிலையிலும் பாவலரேறு அவர்களால் அணுகியிருந்து காணப்பெற்று உடன்பயின்றும் உடன்துயின்றும் சிறந்திருந்த இராசம்மாள் என்னும் பெயருடைய அவர்தம் அக்கையார் மணஞ்செய்விக்கப் பெற்று மக்கள் மூவரை ஈன்றுபுரந்து பெற்று வாழ்ந்துவந்த நிலையில், பாவலரேறு அவர்கள் அத்தமக்கையார்