பக்கம்:நூறாசிரியம்.pdf/433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

407

வாங்கி வருவார், ஊதல் வாங்கி வருவார் என்று மெல்லாம் ஆர்வமுறச் செய்து என்றவாறு,

இரவு வேய்குழல் இன்முகை நகைநாற - கூந்தலின்கண் இரவே கட்டி வைக்கப்பட்ட இனிய மொட்டுகள் சிரித்து மணங்கமழ.

நகை சிரிப்பு- நாற- மணத்தைப் பரப்ப,

எம்மை மனையொடும் இளவோ ஏந்தி - எம்மையும் எம் துணைவியையும் வரவேற்றுக் குழந்தைகளைத் தூக்கி அனைத்துக் கொண்டு

துணை - வாழ்க்கைத் துணை - இளவோர் குழந்தைகள் ஏந்தி அனைத்துக் கொண்டு.

மும்மையும் புரந்த முதுபிறப்பு அவளே - எம்மை நிறைவுறப் பேணிய தமக்கை அவள் மும்மையும் என்பது முழுமையும் என்னும் பொருட்டு முதுபிறப்பு என்பதற்கு மூதாட்டி எனினுமாம்.

யாண்டுகொள் ஈண்டே மாண்ட தமக்கை - எப்போது இங்கே வருவாள் இறந்து பட்ட அக்கை

மீண்டும் காணும் பேணும் கொல்லோ - மீண்டும் வருவாளோ, எம்மைப் போற்றுவாள் கொல்!

அற்றே உண்டுஓர் குறிப்பே முன்னரே அவள் இறப்புப் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு.

முன்றில் வற்ற நீர்நிலைக் குட்டத்து உயர்கரை வீட்டு முற்றத்தை யடுத்த நீர்வற்றுதல் இல்லாத கிணற்றின் உயர்ந்த கரையின்கண்.

குட்டம் - கிணறு.

ஆயே அழுமுகம் சாய்புனல் அவிழ் - அழுகின்ற எம் அன்னையாரின் முகத்தினின்றும் திரண்ட கண்ணிர் வழிய.

ஏயவள் காணாது இரந்து குழற - வெளியே சென்றவளைக்கானாது அவர் வருந்தி வேண்டி நாக்குழற

இரந்து என்றது தெய்வங்களையும் இறைவனையும் விளித்தும் கண்ணிற் கண்டாரைக் கூவியும் மகளைத் தேடித் தருமாறு வேண்டுதல்.

குழற நாக்குழற

மல்லன். ஒருவன் வல் எனப் பாய்ந்தே வலிமை வாய்ந்தா னொருவன் விரைந்து அந் நீர்க்கூட்டத்துட் பாய்ந்து.