பாவலரேறு பெருஞ்சித்திரனார்
419
3
உளப்போங் கல்லை ஊன்றிய விளக்கங்
கொளுப்போ லாயினு மொளிமிகு மெல்லி
உச்சி யூர்ங்கால் வெளிச்சுட ருகல்போல்
மிச்சை நிரப்பின் மிதந்தோ ரன்றி
வைப்புக் கையர் வழங்கல்
5
துய்ப்புந வரலது தூற்றுவர் ஞான்றே!
திணை - பொதுவியல்
துறை - முதுமொழிக்காஞ்சி
4
உள்ளுவன் கொல்லோ உருகுவன் கொல்லோ
கள்ளம் ஊறிய கடுஞ்சொல் வயினெம்
எள்ளறு கேண்மை இகழுங் கொல்லோ!
கோடா நட்பொடு தலைநாட் கொண்டு
வாடா நினைவின் எம்முழை வந்து
5
பூத்த யாப்பின் புதுக்கள் மாந்தி
உயிருவப் புண்ட மயர்வறு காட்சி
மீட்டும் மனங்கொள மகிழுங் கொல்லோ!
எவன்கொல் அறிகுவம்; அவனுளக் கிடக்கை!
தமிழ்க்குடி புகுந்த நெஞ்சென் றேமே!
10
அதுபுரந் தரூஉங் கையென் றேமே!
பொருட்குவை மிகுந்த விறலோன் மருங்கில்
அருட்கொடை எதிர்ந்தி ராண்டையின் றேமே!
தமியே மன்றித் தமிழ்க்குயிர் செகுக்கும்
எமையோர் சிலரும் முகம்புகுந் தனரே!
15
துவ்வாச் செல்வ மீமிசைத் துஞ்சும்
கெளவை கேள்வன்; கடுநெஞ் சினனே!
எளிதவன் வினையே! அளிதவன் நினைவே!
உண்ணும் புற்கையு மீத்த வெண்ணிப்