பக்கம்:நூறாசிரியம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

429

இறப்பினும் அறவழி இகவாத் தலையே!
இரண்டே,
பிறர்க்கெனக் கவலாத் தனக்கெனும் பிழைப்பே! 15
மூன்றே,
முயற்சிக் குறைவின் பிறர்தலைச் சூழ்வே!
நான்கே,
முற்றும் முயல்வற முன்னோர் ஈட்டமும்
கற்றப் பாடும் சூழ்ந்துணும் இழிவே! 20
ஈங்கிவை பயின்ற புகழும் ஆறே:
தம்மாற் பிறந்து தம்மொடு மாய்தலும்,
தம்மின் பின்றைத் தம்நாள் எஞ்சலும்,
தங்குடி நாள்வரை தம்பெயர் நிற்றலும்
தங்குலம் வாழ்தலை தஞ்சீர் பிறங்கலும் 25
தம்விளை வுறுந்தலை தம்புகழ் பரத்தலும்
உலகம் உள்ளுழி ஒளிர்தலும் அவையே!
என்றிவை துணுகிய சான்றோர், ஈண்டே
வாழ்நாள் வடுப்படும் வழியே ணலரே!
சூழ்வறிந் துய்யலின் தாழ்வறி கிலரே! 30
வாழ்வெனற் றம்புகழ் வாழ்வும்
வீர்வெணற் பொதியுடல் வீழ்வுமென் பாரே!

23

மெய்யறி நெஞ்சே உய்யுமா றிவணே!
கைபுனைந் தியற்றாக் கரணிய கருமமாய்
ஐயுறை பூதத் தாகலும் பரிதலும்
உய்யுயிர் உணர்தலும் உளம்விரித் தொளிர்தலும்
கற்பான் வந்த கவினுறு வாழ்க்கை 5
உவகையும் அவிகையும் உறழ்தலால் ஒடுங்கிக்
கவிழ்கன் னத்துக் கையிரண் டூன்றிச்
சூழ்பல காட்சிக்கு உள்ளம் சுண்டி
வீழ்நிலை தவிர்த்து விளங்குக இனனே!
காரிரு னின்றிக் கதிரொளி யிலைபோல் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/455&oldid=1224407" இலிருந்து மீள்விக்கப்பட்டது