பக்கம்:நூறாசிரியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

33


8 வலிதே காலம்


வலிதே காலம்; வியப்பல் யாமே!!
முலைமுகம் பதிய மாந்திப் பாஅல்
ஒழுக வாய்வாங்கி "ஊ, ஆய்” எனவுமிழ்ந்து
தந்தை கழிநகை பெறக்காட்டி, யிழிந்து
குறுநடந்தும் ஒடியும் முதுகிவர்ந் தோச்சியும் 5
நெருநல் ஒவத்து நினைவழி யாமே,
பார்த்த மேனி படர நடைநெற்றி
ஆடு சிறுகால் அதைந்துர மேற
மெலிந்த புன்மார்பு பொலிந்து வலியக்
குரல்புலர்ந்தே அணல்தாவ 10
உளைபொதிந்து கழுத்தடர
வளைமாதர் மனமிதிப்பத்
திமிர்ந்தெழுந்து நின்றாற்குப்
பணைந்தெழுந்த இணைநகிலம்
குறுநுசுப்புப் பேரல்குல் 15
வாலெயிற்றுக் கழைதோளி
முனையொருநாள் வரைக்கொண்டு
மனைதனி வைக்கயெஞ் சிறுமகன் தானும்
பெறல்தந்த பெருமகன் உவக்காண்,
திறல்நந்த யாங்கிவன் தேடிக் கொண்டதே! 20


பொழிப்பு:

வலிவுடையது காலம்; வியப்புறுவேம் யாம்! தாயிடத்து முலையின் மிசை குழவியின் முகம் முற்றும் பதியும்படி பாலை வயிறு முட்ட அருந்தி, அஃது ஒழுகிக் கொண்டிருக்கும்படி தன் வாயை மீட்டு வெளியெடுத்து, “ஊ"ஆய்’ என உமிழ்ந்து தன் தந்தை பெருநகை செய்யுமாறு காட்டி எம் மடியினின்று இறங்கிக் குறுகிய அடிகள் சார்ந்த நடையிட்டும், சிலபொழுது ஓடியும், சிலகால் தன் தந்தையின் முதுகின் மிசையேறி அவரைக்குதிரையாக எண்ணி ஓச்சியும் நின்ற, நேற்றைய பொழுதின் ஓவியமெனப் பதிந்த என் நினைவுகள் அழியாமல் நிற்கவும், யாம் பார்த்து மகிழ்வுற்றே மேனி படர்ந்து பொலியவும், நடைதடுமாறி ஆடி நின்ற சிறிய கால்கள் விம்மிப் புடைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/59&oldid=1221672" இலிருந்து மீள்விக்கப்பட்டது