பக்கம்:நூறாசிரியம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரு

முடியாது. பாட்டில் இணைந்த இரு சொற்களே, சில விடங்களில் ஒரே சொல்கூட முழுப் பொருளையும் தந்துவிடும்.

உரைநடையில் ஒருபக்கம் எழுதுவதைப் பாட்டில் ஒரு வரியில் எழுதிக் காட்டிவிட முடியும்.

"பகுத்தாய் வார்க்குத் தொகுத்தவை விளங்கா" (பாடல் 1; வரி 10) என்னும் ஒரு வரியில் உள்ள கருத்தை உரை நடையில் எத்தனைப் பக்கம் எழுதினாலும் விளக்குவது கடினம். எனவே பாடல் விதை போன்றது; உரைநடை அதனின்று வளர்ந்து எழும் மரம் போன்றது. கருத்துகளை நன்கு மனத்தில் அடக்கிக் கொள்ளவும், மீண்டும் அதை நினைவுகூரவம், பிறரிடம் எடுத்துக் கூறவும், காலத்தால் நிலைத்து நிற்கவும், பாடல் வடிவம் துணை நிற்கிறது.

எனவே, பாடல் நிலைக்கிறது; சுவை தருகிறது; அது தொடர்பான கருத்துகள் விரிய அடித்தளமாகிறது.

முன்னோர் கருத்துகளை அடக்கிய பாடல், உரைநடை என்னும் இரண்டு எழுத்து வடிவங்களின் பாடலே மிகுதி; பல்லோராலும் படிக்கப்பெறுகிறது; காலங்காலமாய் நினைவுகூரப்பெறுகிறது; காலத்தாலும், இடத்தாலும், மக்கள் பெருக்கத்தாலும், உலகியல் நடை மாற்றங்களாலும் அழிந்து போகாமல் பாடல் தன்னை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறது.

நல்ல பாடல், பொதுவான பாடலை விட இன்னும் மிகுதியான உள்ளுயிர்ப்பும் ஆற்றலும் கொண்டு விளங்குகிறது.

நூறாசிரியப் பாடல் ஒவ்வொன்றும் அந்த வகையைச் சேர்ந்தது.

படிப்பதற்கும், மனத்தில் பதிப்பதற்கும், பயில்வதற்கும் எளிமையும், இனிமையும், சுவையும், ஆழமும், அகற்சியும் கொண்டு விளங்குபவை இப் பாடல்கள்!

பேச்சு ஆரவாரமும், உரைநடை அகற்சியும், உணர்வுச் சிதர்வுகளும் பரவலாகக் குமிழியிடும் இக்காலத்திற்கு, இத்தகைய பாடல்கள், படிப்பதற்கு கடினமாகவும், விளங்கிக் கொள்வதற்குச் சற்று ஆழமாகவும் இருப்பன போல் தோன்றலாம்.

ஆனால். அறிவு வளமும் மனநலமும் கொண்ட தமிழ் இலக்கிய ஈடுபாடுடையவர்களுக்கு, இப்பாடல்கள் மிகு சுவையும் இன்பமும் பயப்பவை! அறிவுணர்வை வளர்த்தெடுப்பவை! மனத்தை மேலும் நலமடையச் செய்பவை!

நேரடியாக இதுபோலும் இலக்கிய வடிவங்களைச் சுவைக்க இயலாதவர்கள்