பக்கம்:நூறாசிரியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

51

மிக்காருக்கு இவ்வுலகம் வேறுபாடுறத் தோன்றாது. உளத்தின் அருவாகிய தன்மை அருள். அருவாந்தன்மை எவ்வகை உருவானும் பற்றப்படாத நிலை, வெறுப்பு, விருப்பு, தாழ்வு, உயர்வு, இழிவு, சிறப்பு, முன், பின் முதலிய பூதநிலை மாற்றங்களான் உருவாகத் தோற்றி நிற்கும் உருத்தோற்றம் இலவாகும் உளநிலை அருள்; மெய்யறிவு பற்றி நிற்கும் அன்பு. அன்பு உருவான் பற்றப்படுவது. அருள், அருவான் பற்றப்படுவது. அரு+உள் - அருள் என்க.

அன்பெனப் புகழ்கோ, அருளென மகிழ்கோ- புறத்தே புலப்படத் தோன்றும் அன்பென்று புகழ்வேனா? அகத்தே புலப்படுத்தும் அருளென மனத்தான் நிறைவுறுவேனா? இல்லறப் பொதுவாயது அன்பு எனினும், அதுதான் மனத்தான் நுகரும் அளவானே நிறைந்திருந்து, இதுகால் புறத்தே புகழுக்குரியதாக நிறைந்து வழிதலாய தன்மையான் புகழுக்குரியதாகலின், புகழ்வேனா என்றும், அன்றித் தன்னுயிரை இரங்குதற் கேதுவாகிய உயிரென்று கருதித் தன்னிலையினும் மீத்துயர்ந்து தன் அக மகிழ்ச்சிக்கே முற்றும் உரியதாகலின் அருளெனக் கருதி மகிழ்வேனா என்றாள் என்க. அன்பு நிகழ்ச்சி பிறராலும் எண்ணிப் புகழ்தற்குரியது என்றும், அருள் தன்னளவானே எண்ணி மகிழ்தற்குரியது என்றும், குறிப்புணர்த்தினாள் என்றபடி.

என்கொல் பாகா்க்கு இடுகறி என்னா - நாட்குழம்பிற்கு இடப்படும் கறி என்கொல் வேண்டுவது என்று. பாகர் - குழம்பு.

அறிந்திசின் போதந்த ஏவலர்க்கு - கேட்டு அறிந்து போமாறு வந்த ஏவலனுக்கு.

எம்மனை -- தகவுரைத்து - எம் மனையின் கண்ணே பாகற்காயினைப் புளிக்குழைத்துச் சமைத்துத் தாய் தர யான் மிசைந்த தன்மையை உரைத்து: எனக்கது, மிகு விருப்பம் என்று ஏவலனுக்குப் புலப்படுத்தினாள் என்க. இசின் - அசை. எங்கோ - எம் தலைவன்.

அது நயந்து அருந்தார் ஆகவின்- அதனை விரும்பி உண்ணார் ஆகலின். தனக்காகும் பாகற்காயின் புளிக்குழம்பு, தன் கணவர் விரும்பியுண்ணுதற்காகாது என்று கூறினாள் என்றபடி

அது மற்று அது தவிர,

பிறகொளக் கூறுகோ - பிற யாதாயினும் அவர் விரும்பி உண்ணுதற் கானவற்றை வாங்கி யனுப்பக் கூறுவாய்.

என்றலும் - என்று யான் கூறலும்.

அவன் மீண்டு - அவன் கேட்டறிந்து தலைவனிடம் போய் இது கூறி, வாங்கியவாறு மீண்டும் வந்து.

பெய்து உகத்தந்தது இவக்கான் - பெய்து மகிழும்படி தந்தவற்றை இதோ காண் என்று தோழியிடம் காட்டினாள் என்றபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/77&oldid=1221652" இலிருந்து மீள்விக்கப்பட்டது