பக்கம்:நூறாசிரியம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நூறாசிரியம்


விரிப்பு:

இப்பாடல் புறத் துறையைச் சார்ந்ததாகும்.

மணமுடிந்து ஓராண்டிற்குள் கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு மறுமணம் புணர்த்துமாறு மனை வாழ்வோருக்குச் சான்றோர் ஒருவர் அறிவுறுத்தியதாக அமைந்ததிப் பாட்டு.

கனவற் றுறந்த நங்கை ஒருத்தியின் இளமைக் கொழிப்பினையும், இல்லறந் தோய்ந்து இளமை நலந் துய்க்கா அவளின் துயர் மண்டிய சூழலையும் எடுத்துக்காட்டி, அவளின் எஞ்சிய வாழ்வின் இன்பத்தை உறுதிப்படுத்திக் குமுகாயத் திருத்தத்தைச் செய்ய வற்புறுத்திக் கூறுவதாகும் இப்பாடல்.

தணந்த சுறவத்து மணந்த மாணிழை - நீங்கிய சுறவ மாதத்தில் மனஞ் செய்தலாற் பெற்ற பெருமை மிக்க அணி. தணத்தல்- நீங்கல், போதல், கடத்தல், தள் என்னும் வேர்ச் சொல்லடியாப் பிறந்த சொல் தணத்தல். (தள்-தள்ளுதளர்வு முதலிய சொற்களை ஓர்க). கறவம் முதலை மகரம் (வ. சொல்) தை மாதம். கதிரவன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு மீன் கூட்டத்தினிடையே புகுவதாகும் நிகழ்ச்சியின் அடிப்படையாக அமைக்கப் பெற்றன மாதப் பிரிவுகள். மீன் கூட்டம் ஓரை எனப்படும். அவற்றை அடையாளம் கண்டு கொள்ள ஒவ்வோர் உருவத்தினை அக்கூட்டங்களுக்குக் கற்பனையாகப் பொருத்தி வழங்கினர் பண்டை வானியலார். பின்னை, அவ்வவ் வுருவங்களின் பெயரே அவ்வம் மாதங்களுக்குரிய பெயர்களாக வழங்கின. பண்டைத் தமிழர் மாதங்களின் பெயரை ஓரைப் பெயர்களாகவே வழங்கினர். இடையில் வந்த ஆரியர் அத்துய் தமிழ்ப் பெயர்களையெல்லாம் வட சொற்களாகத் திரித்து வழங்கினர். அரசச் செல்வாக்காலும், சமயப் புனைவுகளாலும் மக்களிடை அவர் பெருமையுற்றபொழுது, அவர் அமைத்த பெயர்களும் பிறவற்றைப் போலவே பெருமையுற்றன. ஆரியர் அமைத்த ஆண்டமைப்பிற்குச் “செளரமானம்” என்றும், அவர்கள் அமைத்த மாதங்களுக்குச் “செளரமான மாதங்கள்” என்றும் பெயர் வைத்துக் கொண்டனர். “செளரம்” என்பது கதிரவனைக் குறிக்கும் வட சொல். கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அக்கால அளவை கணிக்கப் பெற்றதாகலின் அஃது அப் பெயர் பெற்றது.

ஓர் ஓரையில் புகுந்த கதிரவன் பிறிதோர் ஒரைக்குப் போகும் வரையில் உள்ள காலம் ஓர் இராசி அல்லது ஒரு மாதம் எனப் பகுத்தனர். இக் கணக்கீடு பண்டைத் தமிழருடையதே ஆரியர் இடம் மாறிகளாக இருந்தமையான் அவர்களுக்கு நிலையான வானியலறிவு குறைவாக இருந்தது. தமிழரின் இவ் வானியல் அடிப்படையில் அவர் திரித்த வட மொழிப்பெயர்களே பிற்காலத்து நிலை பெற்றுப் போனமையாலும், பண்டைத் தமிழரின் மூலநூற்கள் யாவும் அழிந்தும், அழிக்கவும்