பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக அமைப்பியல் —io 1. நூலகம் நூலகம் ! அறிவுக் கனிகள் குலுங்கும் நெடு மரம்! ஒளி மணிகள் மின்னு ம் கருவூலம்! கல்லார்க்கும் கற்ருர்க் கும் களிப்பருளும் களிப்பாய கலைக்கூடம்! ஆய்வு மலர்கள் மணம் கொட்டும் எழிற்சோலை 1 ஆமாம்-அறிவுவேட்கை யால் அலமந்துதிரிந் திடுவோர் இளைப்பாற்றிக்கொள்ளும் வழி கிடைத்த அறிவுப் பூங்கா.

ஒரு நாட்டை நலமுறச் செய்வதற்கு உதவும் தலையான சில நிலையங்களுள் நூலகமும் ஒன்று. நூலகம் தான் புதியதொரு நாட்டை, புலமை செறி சமுதாயத்தை அமைக்கும் நல்லதொரு கருவி. அறிவைப் பொது வுடமையாக்கித் கல்லாமையை அழித்து, நாட்டு மக்க வளிடையே அறிவைப் பரப்பி, தாயகக் கலைப் பண்பைத் தழைக்கச் செய்வதே இதன் தலையாய பணி. ஆடவரோ, பெண்டிரோ, முேதி பரோ, இளையரோ, கறுப்பரோ, வெள்ளையரோ, எந்தப் பால், பருவம், நிறப் பாகுபாடுகள் அற்று, எல்லோை யும் தன் பால் ஈர்த்து, அவரவர் விழைவுக் கேற்பப் பல்துறை அறிவையும் வழங்குவது நூலகம. o இதைச் சொல் தில் வெட்கமில்லை-இந்தியாவிலும் மற்ற ஆசிய நாடுகள் லும் கட்டைவிரல் புரட்டும் மன்னரே மிகுதி. எண்ணத் தொலையாத பன்னுாருண்டுகளாக