பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இம்மக்கள் சூை றயாடப்பட்டனர். எனவே இன்று மக்களில் பெரும்பான்மையோர் வறியராயும் கல்வியறிவற். ருேரரயும் உள்ளனர். முறையாகக் கல்விக்கனியைச் சுவிைத்து அறிவுச் சிாற்றைப் பருகும் வாய்ப்புக்களும். மறுக்கப்பட்டுவிட்டன. கோளுட்சியும், வேற்ருராட்சியும், கொத்திக் கிழித்த வறுமையும் இங்கே கோடானுகோடிக் குருடரை, ஊமையரை வளர்த்திருக்கின்றன. ஆனல் அவர்தாம் நாட்டின் உண்மையான முதுகெலும்பு ஆவர். அவர் தமக்குக் கல்வியறிவு ஊட்டுதற்கும் அதோடு உலகின் நடவடிக்கைகளை அறிந்திடுவதற்கும் ஆனவழி யில் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவேண்டும். அவர்கள் வலுவூட்டப்படவேண்டும். புதிய உலகின் காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் தம் விழிகளிலே பட வேண்டும். பால், மதம், வகுப்பு வேறுபாடற்று அந்: நாட்டோர் அனைவரும் பெறுகின்ற பேறுகளையும் சமுதாய நலன்களையும் பொறுத்தே நாட்டின் நலன் இருக்கிறது. சமூக நலமும் வாழ்க்கை உயர்வும், மக்களின் கல்வி வாழும் நெறி-எண்ண வளர்ச்சி-இன்ன பிறவற்றின் எதிரொலிகளே. மக்களின் வாழ்க்கை உயர வேண்டு. மென்ருல், அவர்தம் எண்ணமும் இயல்பும் சிறக்க வேண்டுமென்ருல், பரந்த கல்வியறிவு வேண்டும். கல்விக் செல்வத்தை, கண்ணற்றுத் திரியும் இந்த எண்ணற். ருேர்க்கு உடன் வழங்கிடப் பள்ளிகளோடு நாடெங்கும். பூத்திடும் நூலகங்களால்தான் முடியும். கல்லாமையை-அறியாமையை எதிர்த்து நடக்கும் போரில் அறிவின் துாதராய், கல்வியின் உறுப்பினர்களாய். உதவுவன நூலகங்களே. எனவே ஒளி விளக்குகளாம் நூலகங்கள் நாடெங்கும் எழவேண்டும். அவை, ஆர்வ. முடைய அலுவலர் ஒத்துழைப்பு, ஒளியுமிழ் நூல்மணிகள். விளம்பரங்கள் ஆகியவற்ருல் வளம் சிறக்கவேண்டும்.