பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறைக் கவர்ச்சியும் இருக்கை வசதியும் நூலக அறை வண்ணப் பொம்மைகள், படங்கள் மலர்கள் முதலியவற்ருல் கவர்ச்சியாக அழகு படுத்தப் பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் வசதியாக அமருதற் பொருட்டு சிறிய நாற்காலிகள், மேசைகள், சோபாக்கள் இருத்தல் வேண்டும், பிற வழிகள் இசை நிகழ்ச்சிகள், அஞ்சல் தலைகள் சேர்த்தல், நாடகங்கள், பாடல்களை பாவனையோடு ஒப்புவித்தல், :புகைப்படக் கலை முதலியவற்றிற்கெனத் தனித் தனியே அறைகள் அல்லது பகுதிகள் இந்நூலகங்களுள் அமைத் தல் வேண்டும். இவை மேலும் கவர்ச்சியை உண்டாக்கும். குழந்தை நூலகத் தலைவரின் பதவி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். குழந்தைகளிடம் படிக்கும் எண்ணத்தைத் துாண்டி விடுவதன்மூலம் எதிர்காலத்தை :உருவாக்கும் பணியில் பெரும்பங்கு கொள்பவராய் விளங்குகிருர். குழந்தைகளின் கற்பனையை, அறிவை, ஆர்வத்தைக் கிளறிவிடும் நூல்களில் அவர்தம் உள்ளத் தைப் பதிய வைத்தலும், அதற்கான வழிகளைக் காட்டலுமே அவரது பணிகளாகும். குழந்தை நூலகத் தலைவர் பொறுமை, இரக்கம், அன்பு முதலிய பண்புகள் நிறைந்தவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகள் கூர்மையான அறிவு படைத் தோராதலால், உணர்ச்சி அதிகம் உள்ளோராதலால், அவர்தம் உணர்ச்சியைத் தாக்கும் எந்தச் செயலையும் செய்யாது முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டும். மேலும் குழந்தை நூலகங்களின் சட்ட திட்டங்கள் மிகக் கடுமையாய் இருத்தல்கூடாது.