பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பள்ளி நூலகத் தலைவர் சிறந்த தொழிலறிவு பயிற்சியோடு நல்ல உள்ளமும் ஈர இதயமும் உள்ள வ சாய் இருத்தல் வேண்டும். இப்பண்புகள் நிறைந்த வர்கள் தான் நூலகத்தைக் கல்விக் குதவும் ஒரு வாழும் நிலையமாக்க முடியும். đ55b5Djf bi sobib (College Library) பெரும்பாலும் 16 18 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்கள் தான் கல்லூரியில் துழைகின்றனர். மாணவர் உள்ளத்திலும் உடலிலும் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்படும் இந்த நேரத்தில்தான் அவர் தமக்குச் சரியான வழிகாட்டிகள் தேவை. இளையோர், தமது உடலும் உள்ளமும் இன்னும் முழுவதும் வளரவில்லை என்ருலும் தம்மை உணரத் தொடங்குகின்றனர். படிப் படியாகப் பால் உணர் ச்சிகள் தாமே முன் வந்து இந்த இளம் உள்ளங்களைச் சிதைக்கின்றன. க ல் லூ ரி ஆாலகத் தலைவர் இந்த உண்மைகளை நன்கு தம் உள்ளத் திலே கொண்டு இன்னும் பக்குவம் அடையாத இந்த இளம் உள்ளங்களை மிகுந்த அக்கறையோடு வளர்க்க வேண்டும். நூலகத் தலைவர் பாடநூல்களை மாத்திரம் தருவதோடு இருந்து விடாது, கலை பண்பு விளக்கங்கள், எளிய அறிவியல் ஆய்வுகள், மறச் செயல்களின் தொகுப்புக் கள், உணர்வூட்டும் வாழ்க்கை வரலாறுகள், பண்புள்ள பண்டைய இலக்கிய கள், தற்கால இலக்கியங்கள், விளையாட்டு-பொழுதுபோக்கு இவை பற்றிய நூல்கள் ஆகிய பலவற்றையும் தேர்ந்து திரட்டித் தரவேண்டும். மிகவும் புதியோராயும், சுற்றுப் புறங்களிலிருந்து அப் போதுதான் வந்தோரு என மாணவர் புதிய சூழ்நிலையில் ஒன்றும் புரியாது தி ைகப்புடன் இருப்பார்களேயாயின்,