பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கள், பல் நாட்டு நூல்களின் வரலாறுகள், விளக்கங்கள், செய்தி இதழ்கள் முதலியவற்ருல் உதவுதல் ஆகும். பல் கலைக்கழக நூலகங்களின் சிறப்பு அவை வைத்திருக்கும் .நூல்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததில்லை; ஆளுல் ஆராய்ச்சிக்குரியனவும் உடன் உதவுவனவுமானதொகுதி களும், அங்கு ஏராளமாய் இருப்பதைப் பொறுத்தே இருக்கிறது. மக்கள் விரும்பும் எல்லாச் செய்திகளும் பல்கலைக்கழக நூலகத்தில் கிடைக்கும் வண்ணம், நூல் களும் செய்தி இதழ்களும் வாங்கப் பெறுதல் வேண்டும். பல்கலைக்கழக நூலகத்தார், வேண்டிய விளக்கங் களையும், நூல்களையும், செய்திகளையும், கற்போருக்குக் காலத்தே தருவதில் தேர்ந்தவரா யிருக்கவேண்டும். எனவே இங்கு பணியாற்றுபவர்கள் சிறந்த கல்வி அறி வடையோராகவும், திறமையுடையோராகவும் விளங்குதல் வேண்டும். பல்கலைக்கழகம் பல்வகைக் கல்வித் துறைகளின் கூட்டமைப்பாகும். எனவே பல்கலைக்கழக நூலகமும் பல துறைகளின் கூட்டமைப்பாக, மத்திய-தலைமை நூலக மாக அமைகிறது. தலைமை நூலகம், பல்துறை நூலகங் <ssir (Departmental Libraries) [56örG, Gruuson fò ŋ1615/b&5ử பல்வகையிலும் உதவுகிறது. பல்துறை நூலகங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் தலைமை நூலகமே வாங்கு கின்றது. பின்னர் அவைகளைத் தொகுத்து, வகுத்து, அவைகளுக்குரிய பட்டியலைத் தயாரித்து, அவைகளைப் பல்துறை நூலகங்கங்களுக்கு அனுப்பிய பின்னர் கண் காணிக்கவும் செய்கிறது. அந்தத் துறைகளில் வேலை பார்ப்போர் உடனுக்குடன் படிக்கும் வகையில், பல்துறை நூலகங்கள் அந்தந்தத் துறைக்குரிய அறைகளில் தனித் தனியாக அமைக்கப்படும்.